சொந்த நாட்டில் கூட இத்தனை கார்கள் விற்பனையாகுமானு தெரியாது!! ஐரோப்பாவில் இருந்து வந்து இதெல்லாம் பெரிய விஷயம்!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.5 இலட்ச கார்களை விற்பனை செய்து கார்கள் விற்பனையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்தும், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகனையும் ஒன்றாக சொல்லலாம். ஐரோப்பாவை சேர்ந்த இந்த இரு நிறுவனங்களும் கூட்டணியில் இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். கூட்டணி கொள்கையின் படி, நிறைய கார் பாகங்களை இந்த இரு நிறுவனங்களும் பகிர்ந்துக் கொண்டுள்ளன.

skoda auto volkswagen car sales

அதாவது, காரின் அடிப்படை சேசிஸை ஒன்றாக இணைந்து உருவாக்கி, அதனை கொண்டு இந்த இரு நிறுவனங்களும் தங்களது கார்களை வடிவமைத்துக் கொண்டுள்ளன. இந்த வகையில் வெளிவந்ததே ஸ்கோடா குஷாக் - ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா - ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகும்.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம். ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 1,45,713 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 1,45,713 கார்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களும் அடங்குகின்றன.

skoda auto volkswagen car sales

உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 1,465 ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 44,248. தொடர்ந்து 2வது ஆண்டாக ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களின் உள்நாட்டு விற்பனை 1 இலட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக, தங்களது மேட்-இன்-இந்தியா கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல், வெளிநாட்டு ஏற்றுமதியும் இதற்கு முந்தைய 2022ஆம் ஆண்டை காட்டிலும் 32% அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு, மேட்-இன்-இந்தியா ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஒரே மாதிரியான எம்.க்யூ.பி-ஏ0-இன் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இரண்டும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் அடங்குகின்றன.

skoda auto volkswagen car sales

இதன் காரணமாகவே இந்த இரு நிறுவனங்களும் கூட்டணி சேர்ந்தன என்பது வேறு கதை... இந்த குழுமத்தில்தான் ஆடி, லம்போர்கினி மற்றும் போர்ஷே நிறுவனங்களும் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருந்து இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி நிறுவனங்களின் லக்சரி கார்களின் விற்பனை தொடர்ந்து இரட்டை இலக்கங்களில் அதிகரித்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக, வியட்நாம் நாட்டிற்கும், மற்ற ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை ஏற்றுமதி செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் தயாராகி வருகிறது.

skoda auto volkswagen car sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஐரோப்பாவை சேர்ந்தவையாக இருந்தாலும், ஆசியாவிலும் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்றான நம் இந்தியாவில் கார்கள் விற்பனையை அதிகரிக்க பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்த 2023ஆம் ஆண்டிலும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் கார்கள் விற்பனை 1 இலட்சத்தை கடக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 23:09 [IST]
English summary
Skoda auto volkswagen car sales in india in 2023 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X