ஃபோக்ஸ்வேகன் கார்களை தைரியமாக வாங்கி குவிக்கும் மக்கள் - ஒவ்வொரு மாதமும் சேல்ஸ் நம்பர் ஏறிட்டே போகுது!!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் (Skoda Auto Volkswagen), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. ஸ்கோடாவில் இருந்து 4 கார்களும், ஃபோக்ஸ்வேகனில் இருந்து 3 கார்களும் தற்சமயம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு, இவை இரண்டும் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்கின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அவை எத்தனை யூனிட்கள் குறைவு/ அதிகம் என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகனில் இருந்து 3 கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், கடந்த சில மாதங்களாக ஸ்கோடாவை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இது, நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் ஸ்கோடா கார்களை காட்டிலும், ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

skoda auto volkswagen cars sales

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் கார்களின் எண்ணிக்கை 3,577 ஆகும். ஆனால் உண்மையில், இந்த எண்ணிக்கை ஆனது 2023 ஆகஸ்ட்டை காட்டிலும் 14.30% குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4,174 கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. ஆனால், 2024 ஜூலை மாதத்தில் 3,407 கார்கள் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் கார் விர்டுஸ் ஆகும். ஃபோக்ஸ்வேகனின் செடான் ரக காரான விர்டுஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,876 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2,140 விர்டுஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 264 விர்டுஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

skoda auto volkswagen cars sales

ஆனால், 2024 ஜூலை மாதத்தில் 1,766 விர்டுஸ் கார்களை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, இந்த ஆண்டில் ஜூலையை காட்டிலும் ஆகஸ்ட்டில் 110 விர்டுஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. விர்டுஸுக்கு அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் காராக 2வது இடத்தில் டைகுன் உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டைகுன் கார்களின் எண்ணிக்கை 1,628 ஆகும். 2023 ஆகஸ்ட்டில் 1,943 டைகுன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் டைகுன் கார்களின் விற்பனை ஆனது 16.21% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் 1,564 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. விர்டுஸ், டைகுன் மட்டும் இல்லாமல், கடந்த மாதத்தில் 73 டிகுவான் கார்களையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

skoda auto volkswagen cars sales

மறுப்பக்கம் ஸ்கோடா கார்களை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,772 கார்கள் ஸ்கோடாவில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் ஃபோக்ஸ்வேகன் கார்களை காட்டிலும் அதிகமாக 4,307 ஸ்கோடா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதுவே, 2024 ஜூலையில் வெறும் 2,103 கார்களை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார் குஷாக் ஆகும். 1,502 குஷாக் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் 2,409 குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குஷாக்கிற்கு அடுத்து அதிகமாக, 1,122 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், 145 கோடியாக் கார்கள் மற்றும் 3 சூப்பர்ப் கார்களும் ஸ்கோடாவில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஃபோக்ஸ்வேகன் கார்களை காட்டிலும் ஸ்கோடா கார்கள் தான் அதிகமாக மக்களால் வாங்கப்பட்டு கொண்டிருந்தன. ஆனால், சமீப மாதங்களாக ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை எப்போதும் போல தான் உள்ளது; ஸ்கோடா கார்கள் விற்பனை தான் வெகுவாக குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 23:47 [IST]
English summary
Skoda auto volkswagen cars sales report 2024 august check all details here
மேலும்... #volkswagen #skoda #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X