பேசாம நீ ஐரோப்பாவுக்கே போய்டு சிவாஜி... இந்தியாவில் டல் அடிக்கும் ஸ்கோடா கார்கள் விற்பனை!!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் (Skoda Auto Volkswagen) நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான கார்களை விற்பனை செய்கிறது. ஆனால் உண்மையில், வழக்கத்தை காட்டிலும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை ஆனது மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனை சமாளிக்க அவ்வப்போது சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் பெரியதாக முன்னேற்றம் ஏற்பட்டது போல் தெரியவில்லை. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2024 ஜூன் மாதத்தில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் என்பன இரு வெவ்வேறு நிறுவனங்கள் ஆகும். ஆனால் இவை இரண்டும் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றன. இந்த வகையில், இந்திய மக்களுக்கென எம்.க்யூ.பி-ஏ0-இன் என்கிற பெயரில் புதிய பிளாட்ஃபாரத்தை இவை உருவாக்கின. இதில், 'இன்' என்பது 'இந்தியா' என்பதை குறிக்கிறது.

skoda auto volkswagen cars sales

இந்தியாவிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட முதல் காராக 2021ஆம் ஆண்டில் ஸ்கோடா குஷாக் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், அதே பாணியை பின்பற்றி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் டைகுன் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் கார்கள் உற்பத்தியில் செலவு கணிசமாக குறைகிறது.

குஷாக், டைகுனை தொடர்ந்து, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் அதே பாணியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 7 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2024 ஜூன் மாதத்தில் 5,826 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 7,360 கார்கள் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

skoda auto volkswagen cars sales

இந்த வகையில் பார்க்கும்போது, இந்த கூட்டணி நிறுவனத்தின் கார்கள் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,534 கார்கள் குறைந்துள்ளது. கடந்த 2024 மே மாதத்திலும் 6,157 கார்கள் இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதத்தில் இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்து இருப்பது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகும்.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 1,656 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 ஜூன் மாதத்தில் 1,812 விர்டுஸ் கார்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, விர்டுஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 8.61%, அதாவது 156 யூனிட்கள் குறைந்துள்ளது. விர்டுஸுக்கு அடுத்து இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக 2வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளது.

skoda auto volkswagen cars sales

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டைகுன் கார்களின் எண்ணிக்கை 1,519 ஆகும். 2023 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்த 1,449 டைகுன் கார்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை எண்ணிக்கை ஆனது 70 அதிகம் ஆகும். இதற்கடுத்து 3வது இடத்தில் ஸ்கோடா ஸ்லாவியா உள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா காராக ஸ்லாவியா விளங்குகிறது. கடந்த மாதத்தில் 1,230 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2023 ஜூன் மாதத்தில் 1,639 ஸ்லாவியா கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல், 2023 ஜூன் மாதத்தில் 2,133 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த குஷாக் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 1,198 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை இல்லாமல், கடந்த ஜூன் மாதத்தில் 137 ஸ்கோடா கோடியாக் கார்கள், 85 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார்கள், ஸ்கோடா சூப்பர்ப் கார் ஒன்றும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் விற்பனை மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது. மற்றவை அனைத்தின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டு சமயத்தில் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்கோடா குஷாக் காரை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 8:00 [IST]
English summary
Skoda auto volkswagen cars sales report of june 2024 check all details here
மேலும்... #volkswagen #skoda #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X