மாருதி லெவலுக்கு இறங்கீட்டாங்க! இவ்ளோ கம்மி விலையில் அந்த நிறுவனத்தின் காரா! நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஏராளமான கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். சொல்லப்போனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுதான் இதற்கு காரணம். எனவே இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் தங்கள் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதில், ஸ்கோடா (Skoda) முக்கியமானதாகும். ஸ்கோடா நிறுவனம் முதல் முறையாக இந்த செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக இந்த காரின் பெயர் என்ன? என்பது நாளை (ஆகஸ்ட் 21) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் காரான இதற்கு, ஏற்கனவே 10 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. தற்போது இதில் இருந்து 5 பெயர்கள் வடிகட்டப்பட்டுள்ளன. எஞ்சிய 5 பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அவை ஸ்கோடா க்விக் (Skoda Kwiq), ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq), ஸ்கோடா காஸ்மிக் (Skoda Kosmiq), ஸ்கோடா கயாக் (Skoda Kayaq) மற்றும் ஸ்கோடா க்ளிக் (Skoda Kliq) ஆகியவை ஆகும். இதில் இருந்து ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டு, நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம். இந்த காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே போட்டி அனல் பறந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் வரவுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய கார், போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
இந்த கார் 8 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப நிலையில் வந்தால், இதுதான் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான ஸ்கோடா காராக இருக்கும். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் புத்தம் புதிய ஸ்கோடா காரை வாங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








