அந்த கம்பெனி கார் இவ்ளோ கம்மி ரேட்ல வருதா! மாருதி, டாடாவுக்கு எல்லாம் இந்நேரம் வயித்த கலக்க ஆரம்பிச்சிருக்கும்

இந்திய சந்தையில் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஸ்கோடா (Skoda) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் டொயோட்டா டைசர் (Toyota Taisor) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக, இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் இந்த கார், வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரின் பெயர் என்ன? என்பது வரும் ஆகஸ்ட் 21ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Skoda Compact SUV

இந்த காரின் பெயர் 'K'-ல் ஆரம்பித்து 'Q'-ல் முடிய கூடியதாக இருக்கும். ஆனால் அதிகாரப்பூர்வமான பெயர் என்ன? என்பது இன்னும் நமக்கு தெரிய வரவில்லை. அதை தெரிந்து கொள்வதற்கு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும். இதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால், ஆவல் அதிகரித்துள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

Skoda Compact SUV Rear Design

வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் இந்த ஸ்கோடா காரின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ரக கார்கள் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அவை ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதுதான், இதற்கு காரணம்.

இந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். அனேகமாக இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவின் மற்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2024, 21:22 [IST]
English summary
Skoda compact suv name unveil date august 21 full details here
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+