நம்ப முடியாத குறைவான விலை... மாருதி லெவலுக்கு இறங்கிய ஸ்கோடா... இந்த கார் பந்தயம் அடிக்க போறது உறுதி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எஸ்யூவி ரக கார்களிலேயே இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள்தான் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கின்றன. மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் விலை சற்று அதிகம். இதன் காரணமாகவே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களை, வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுவதால், ஸ்கோடா (Skoda) நிறுவனம், புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புத்தம் புதிய காரில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Skoda Compact SUV

இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். வசதிகளை பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவை தவிர, சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். MQB A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில், இந்த கார் உருவாக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய கார்களிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Skoda Kushaq

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரானது, ஸ்கோடா குஷாக் காரை விட, சற்று நீளம் குறைவானதாக இருக்கும். ஸ்கோடா குஷாக் காரில் இடம்பெற்றுள்ள பல்வேறு வசதிகள் அப்படியே இந்த புதிய காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இதனை 'பேபி குஷாக்' என்றும் கூட அழைக்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விலையில் வந்தால், நிச்சயமாக விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புத்தம் புதிய கார் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஸ்கோடாவின் இந்த புதிய கார் விற்பனையில் சவால் அளிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 12:18 [IST]
English summary
Skoda compact suv to be launched by march 2025 expected price features
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+