ஸ்கெட்ச் போடுவதில் ரவுடிகளையே மிஞ்சிடும் போல இந்த ஸ்கோடா.. போட்டியாளர்களை வேறோடு சாய்க்க வருகிறது எல்ராக்!
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா (Skoda) இந்தியாவில் தன்னுடைய இருப்பை விரிவுப்படுத்தும் விதமாக ஓர் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவைப் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் தொடங்கி மிக மிக விலை உயர்ந்த மின்சார கார் மாடல் வரை என அனைத்திற்கும் இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால்தான் பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) போன்ற சொகுசு கார் உற்பத்தியாளர்கள் நம் நாட்டில் போட்டி போட்டுக் கொண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய (ஜூலை 8) தினம்கூட இந்திய பணக்காரர்களின் பெரும் எதிர்பார்ப்பான இக்யூஏ (EQA) மற்றும் இக்யூபி (EQB) எனும் சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இவ்வாறு சந்தைச் சூடுபிடித்துக் காணப்படுகின்றத இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கோடா நிறுவனம் போட்டியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விதமாக தன்னுடைய புத்தம் புது மின்சார காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. இது பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளன.
அந்நிறுவனம் எல்ராக் (Elroq) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையே அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி, ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடல் விற்பனைக்கு வழங்கப்படாத சூழலே உள்ளது. இந்த மாதிரியான வேளையிலேயே மின்சார கார்கள் பிரிவிலும் தன்னுடைய தீவிரமான போட்டி குணத்தைக் காண்பிக்க அது திட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அந்த நிறுவனம் என்யாக் ஐவி (Enyaq iV) கார் மாடலுடன் சேர்த்தே எல்ராக் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஓர் கார் மாடலே என்யாக் ஐவி ஆகும். இப்போதைய நிலவரப்படி போட்டியாளர்களுக்கு பூஜ்ஜியம் போட்டி நிலையிலேயே மின்சார கார் பிரிவில் உள்ளது.
ஆனால், இப்போது அது வகுத்து வரும் திட்டங்களை வைத்து பார்க்கையில், விரைவில் மிகப் பெரிய போட்டியாளனாக அது உருவெடுக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஐசிஇ (ICE) கார்கள் பிரிவைப் போலவே மின்சார கார் பிரிவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கோடாவின் திட்டத்தில் புதிதாக இடம் பிடித்திருக்கும் எல்ராக் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியர்களின் மனம் கவர்ந்த எஸ்யூவி கார் பிரிவிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எல்ராக், உலக வெளியீட்டிற்கு இன்னும் சில காலங்களே இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஐரோப்பிய சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்குள் அது விற்பனைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்தே இந்தியாவில் உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உள்நாட்டிலேயே அந்த கார்களின் உற்பத்தி பணிகளை அது தொடங்கும் என்று கூறப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்குள் இந்த பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கலாம் என்கின்றன தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகின்றது. இதனால் ஸ்கோடா கார் பிரியர்கள் இப்போதே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அதேவேளையில், நிறுவனத்தின் இந்த பிளான் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களான ஹூண்டாய் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கிரெட்டா இவி-யை களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
எல்ராக் எலெக்ட்ரிக்: இந்த மின்சார கார் பற்றிய எந்தவொரு தகவலையும் ஸ்கோடா அறிவிக்கவில்லை. அனைத்து விபரங்களும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஸ்கோடாவின் சமீபத்திய தகவலின் வாயிலாக அது 4.2 மீட்டர் நீளம் கொண்ட வாகனமாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், புதிய நவீன கால டிசைனை தாங்கிய வாகனமாகவும் இது இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர, நான்கு வகைகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. அந்தவகையில், எல்ராக் 50, எல்ராக் 60, எல்ராக் 85 மற்றும் எல்ராக் 85எக்ஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.
வேரியண்டுகளுக்கு ஏற்ப 55 kWh, 63 kWh மற்றும் 82 kWh ஆகிய பேட்டரி பேக் விருப்பங்களிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, பின் வீல் இயக்கம் தேர்வு மற்றும் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
என்யாக் ஐவி: இந்த எலெக்ட்ரிக் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி (MEB) இயங்குதளத்தைப் பயன்படுத்தியே கட்டமைக்கப்படுகிறது. மேலும், ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 (Volkswagen ID.4) மற்றும் ஆடி க்யூ4 இ-ட்ரான் (Audi Q4 e-tron) கார் மாடல்களுடன் பல விஷயங்களை இந்த கார் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றது.
4,648 மிமீ நீளம் மற்றும் 1,877 மிமீ அகலம் கொண்டதே என்யாக் ஐவி ஆகும். ஸ்கோடா கோடியாக்-கை விட சற்று சிறிய உருவமே இதுவாகும். அதேவேளையில், இரண்டு வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி இதுவாகும். இது ஓர் முழு சார்ஜில் 513 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் மற்றும் 125 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தியும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்கள் பிரிவில் ஸ்கோடா இன்னும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. தற்போது அது தீட்டி வரும் திட்டங்களை வைத்து பார்க்கையில் சீக்கிரமே அடுத்தடுத்து என பல எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான சமிக்ஞையையே அது வெளிப்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








