மொத்தமும் டிஜிட்டல் தான்... இந்திய மார்க்கெட்டை ஒருவழி பண்ணாம விட போறதில்லை - ஸ்கோடா தெளிவான முடிவோடு இருக்கு!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் இந்தியாவிலும் முற்றிலுமாக 360-டிகிரிக்கு டிஜிட்டல் தரத்தை பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக, ஸ்கோடா காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்கோடா இணையத்தளத்தை பயன்படுத்துவது மேம்படுத்தப்படுவது மட்டுமின்றி, வேறு சில செயல்பாடுகளிலும் டிஜிட்டல் தரத்தை ஸ்கோடா உட்புகுத்துகிறது.

ஸ்கோடா ஆட்டோ, இந்தியா மட்டுமின்றி உலகளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஸ்கோடா 2021இல் முற்றிலும் புதிய ஃபிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட குஷாக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.

skoda kushaq

ஸ்கோடா குஷாக், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவில் புதியதாக மற்றுமொரு காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இதன் மூலமாக புதிய அத்தியாயத்தை இந்தியாவில் துவங்கவுள்ளதாகவும் கஸ்டமர்களின் ஆர்வத்தை ஸ்கோடா தூண்டியுள்ளது.

தங்களது கார்களை வாங்கும் கஸ்டமர்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றும் முயற்சியாக 360-டிகிரி டிஜிட்டல் செயல்பாடுகளை கொண்டுவர ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. இதன்படி, பழைய மற்றும் புதிய ஸ்கோடா கஸ்டமர்கள் டிஜிட்டல் தரத்திலான ஓனர் எக்ஸ்பிரீயன்ஸை அனுப்பவிக்கலாம். "நேம் யுவர் ஸ்கோடா" என்கிற பெயரில் ஸ்கோடா நிறுவனம் ஒரு டிஜிட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

skoda india enhances digitalisation strategy

இந்த திட்டத்தின் மூலமாக, ஸ்கோடா அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஸ்கோடா கார்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் தங்களுக்கு விருப்பமான பெயர்களை பரிந்துரைக்கலாம். தற்போதுவரையில் மட்டுமே சுமார் 1.5 லட்ச பெயர் பரிந்துரைப்புகள் கிடைத்துள்ளதாக ஸ்கோடா நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மக்கள் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக இன்னும் சில செயல்களையும் ஸ்கோடா மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 24ஆம் தேதி, கஸ்டமர்கள் தங்களது டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, ஸ்கோடா கார்களை வாங்குபவர்களுக்காக சில சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகைகள் அன்றைய மார்ச் 24ஆம் தேதி மட்டுமே கொடுக்கப்பட்டது. ஸ்கோடா பிராண்ட் உடன் கஸ்டமர்களை நெருக்கமாக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்ட அந்த சலுகைகள் மூலமாக அந்த ஒரே நாளில் 709 முன்பதிவுகளை ஸ்கோடா பெற்றுள்ளது.

skoda kodiaq

இதே மகிழ்ச்சியில், 'அனைவருக்குமானது ஸ்கோடா' என்கிற திட்டத்தையும் ஸ்கோடா நிறுவனம் செயல்படுத்தியது. இது ஒரு மெம்மர்ஷிப் புரோகிராம் ஆகும். ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது ஆர்வமாக இருப்பவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்திவரும் ஸ்கோடா, இதன் மூலமாக இந்த குழுவில் அங்கம் வகிப்பவர்களுக்கு ஸ்கோடா நிகழ்ச்சிகளில் விஐபி அந்தஸ்து மற்றும் கார் & சர்வீஸை பெறும்போது சிறப்பு சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், 'அனைவருக்குமானது ஸ்கோடா' மிஷனில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் குறித்த அப்டேட்களை முன்கூட்டியே வழங்கவும் ஸ்கோடா முடிவெடுத்துள்ளது. இதேபோன்று, கஸ்டமர்களை கவரும் முயற்சியாக கடந்த 2023ஆம் ஆண்டிலும் போன் சார்ந்த 'தி சர்வீஸ் CAM' என்கிற செயலியை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடாவின் இந்த நடவடிக்கைகள் மூலமாக ஸ்கோடாவின் வெப்சைட் மட்டுமின்றி ஷோரூம்களும் முற்றிலுமாக டிஜிட்டல் தரத்திற்கு மாறவுள்ளன. புதியதாக ஸ்கோடா காரை வாங்க வரும் கஸ்டமர்கள் ஷோரூமில் மேசைகளில் இருக்கும் திரைகள் மூலமாக தங்களுக்கு பிடித்தமான காரை தேர்வு செய்யலாம். இத்தகைய நடவடிக்கையை இந்தியாவில் கையில் எடுத்துள்ள முதல் கார் நிறுவனம் ஸ்கோடா என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இது எந்த அளவிற்கு இந்திய கஸ்டமர்களை கவரவுள்ளது என்பதை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 12:00 [IST]
English summary
Skoda enhances digitalisation strategy in india by introduced 360 degree digital activities
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X