வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
ஸ்கோடா நிறுவனம் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. ஸ்கோடா நிறுவனம் தயாரிக்கும் ஸ்லாவியா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாத விற்பனை விபரங்களில் சில முக்கியமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று இந்தியாவில் தனித்துவமான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஸ்கோடா நிறுவனம் தனது தனித்துவமான தயாரிப்புகளை தயாரித்து ஸ்கோடா கார்களை விரும்பும் மக்களுக்கு தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஸ்கோடா நிறுவனத்தை பொறுத்தவரை அந்நிறுவனம் தயாரிக்கும் ஸ்லாவியா கார் அதிகமான விற்பனையை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் கார் இருக்கிறதே இந்த இரு கார்களும் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் 2600 யூனிட்டுகள் இருக்கிறார்களும் சேர்ந்து விற்பனையாகி உள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க, அந்நிறுவனம் தயாரிக்கும் கோடியாக் கார் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாமல் இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருந்தாலும், மக்கள் பலர் இந்த காரை அதிகளவிற்கு விரும்பவில்லை என்றே சொல்லலாம். இதற்கு கடந்த மார்ச் மாதம் நடந்த விற்பனையை பார்த்தாலே நமக்கு தெரியும். ஒரு மாதம் முழுவதும் வெறும் 136 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

இதுவே கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையான 416 கார் என்ற விற்பனை எண்ணிக்கை ஒப்பிடும்போது இந்த ஒரே ஆண்டில் 67.31% விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது இந்த காருக்கான மவுசு மக்கள் மத்தியில் குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் பலர் இந்த காரை வாங்கலாமா வேண்டாமா என யோசித்து வருகிறார்கள். பலர் இந்த காரை விட மார்க்கெட்டில் சிறந்த கார்கள் இருப்பதால் அந்த காரை தேர்வு செய்கிறார்கள்.
ஸ்கோடா கோடியாக் காரை பொறுத்தவரை ஒரு 7 சீட்டர் கொண்ட காராகும். இதன் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை காரின் உள்ளே 8இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 10.25இன்ச் கொண்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வயர்லெஸில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளை ஆகிய அம்சங்கள் இந்த காருக்குள் உள்ளன. இந்த காரின் உள்ளே பேனரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது, 12வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 9 ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக வருகிறது. இதுபோக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன் பக்கம் மற்றும் பின்பக்கம் பார்க்கிங் சென்சார், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் மார்க்கெட் இந்த கார் மார்க்கெட்டில் உள்ள எம்ஜி குளோஸ்டர் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை இந்தியாவில் இதை காரை வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 39.99 லட்சம் விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இதுதான் இந்த காரின் விற்பனை மந்தமாவதற்கு காரணமாக தெரிகிறது. இந்த விலையில் பார்ச்சூனர் போன்ற கார்களையே வாங்க முடியும் என்பதால் மக்கள் பலர் அந்த கார்களை தான் தேர்வு செய்கிறார்கள். ஸ்கோடா கோடியாக் காரை பலர் விரும்புவதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா கோடியாக கார் மார்க்கெட்டில் விற்பனையாகும் நிலையில் அதைவிட அதிக அம்சங்கள் மற்றும் லுக் கொண்ட கார்கள் இருக்கின்றன என்பதால் அந்த கார்களை தான் மக்கள் தேர்வு செய்கிறார்கள். இந்த செக்மெண்டில் கார் வாங்கும் எண்ணிக்கையில் உள்ள மக்களை குறைவு. அவர்களையும் இந்த கார் ஈர்க்காத வகையில் இருப்பதால் பலர் இந்த காரை விரும்பாமல் வேறு காரை வாங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications









