20கிமீ மைலேஜ் தரும் இந்த கார் ராணுவ கேன்டீன்ல எவ்ளோ கம்மி விலைக்கு விக்குது தெரியுமா? பெரிய தொகையை சேமிக்கலாம்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் பலன் பெறும் விதமாக ராணுவ கேன்டீனில் அனைத்து வகையான பொருட்களும் சற்று மலிவு விலையில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. அந்தவகையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் சேர்த்து வாகனங்கள் சிலவும் ராணுவ வீரர்களுக்கான ராணுவ கேன்டீனில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் பல புகழ்பெற்ற கார் மாடல்கள் இந்த கேன்டீனில் விற்கப்படுகின்றது. அந்தவகையில், பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் ராணுவ கேன்டீனில் என்ன விலையில் விற்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஸ்கோடா குஷாக் இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டும் அதில் வழங்கப்படுகின்றது. இதில் ஆம்பிஷன் ட்ரிம்மில் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (SKODA Kushaq Ambition 1.0L 6MT Petrol) கொண்ட குஷாக் ராணுவ கேன்டீனில் ரூ. 11.81 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதே தேர்வு சாதாரண குடிமகனுக்கு ரூ. 13.19 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. எக்ஸ்-ஷோரூமில் விற்பனைக்குக் கிடைக்கும் விலையே இதுவாகும். மேலே பார்த்த தேர்வை ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் (SKODA Kushaq Ambition 1.0L 6AT Petrol) வாங்க வேண்டும் என்றால் நாம் எக்ஸ்-ஷோரூமுக்கே 14.99 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.
அதேவேளையில், ராணுவ வீரர்களுக்கான ராணுவ கேன்டீனில் இந்த ஆப்ஷன் 13.44 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. எப்படி பார்த்தாலும் நம்மைவிட ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் ராணுவ வீரர்களால் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். ஸ்கோடா குஷாக் ஸ்டைல் 1.0 லிட்டர் 6 ஸ்பீடு மேனுவல் பெட்ரோல் (SKODA Kushaq Style 1.0L 6MT Petrol) ராணுவ கேன்டீனில் 14.02 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.
இந்த காரின் நமக்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.69 லட்சம் ஆகும். இந்த தேர்வின் ஆட்டோமேட்டிக் (SKODA Kushaq Style 1.0L 6AT Petrol) விலை ரூ. 17.29 லட்சம் ஆகும். இது வழக்கமான குடிமகனுக்கு விற்கப்படும் விலையாகும். ராணுவ வீரர்களுக்கு இதே கார் மாடல் 15.47 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.
ஸ்கோடா குஷாக் ஸ்டைல் 1.5 லிட்டர் 6 ஸ்பீடு மேனுவல் பெட்ரோல் (SKODA Kushaq Style 1.5L 6MT Petrol) தேர்வின் ராணுவ கேன்டீன் விலை ரூ. 15.90 லட்சம் ஆகும். இதே கார் சாதாரண குடிமக்களுக்கு ரூ. 17.79 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த வேரியண்டின் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் (SKODA Kushaq Style 1.5L 5AT Petrol) ரூ. 16.59 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது ராணுவ கேன்டீன் விலையாகும். பொதுமக்களுக்கான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 18.99 லட்சம் ஆகும். அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஓர் கார் மாடலே ஸ்கோடா குஷாக் ஆகும்.
அந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க், எலெக்ட்ரிக் சன்ரூஃரப், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, டிஸ்க் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன், எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப், காரின் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் குஷாக் காரில் வழங்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக் அதிகம் மைலேஜ் தரும் எஸ்யூவி ரக காராகவும் காட்சியளிக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கே 15.78கிலோமீட்டர் முதல் 19.76கிலோமீட்டர் வரையில் இந்த கார் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது அராய் வழங்கிய சான்றின்படியான மைலேஜ் விபரம் ஆகும். இருப்பினும் இந்த கார் இந்தியர்களை சென்ற மாதத்தில் கவர தவறிவிட்டது. இதன் விளைவாக இந்த கார் விற்பனையில் லேசான சரிவை சென்ற மாதத்தில் பெற்றது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








