சொன்னதைவிட அதிகம் மைலேஜ் தரும் ஸ்கோடா குஷாக் கார் மாடலின் அப்டேட் வெர்ஷனை எப்போது எதிர்பார்க்கலாம்?..

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் மைலேஜ் திறன் மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களில் ஒன்றாக ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) இருக்கின்றது. இந்த கார் மாடல் சொன்னதைவிட அதிகம் மைலேஜை வழங்கிக் கொண்டிருப்பதாக, சமீபத்தில் அந்த காரை பயன்படுத்தி வரும் ஒரு நபர் கூறி ஒட்டுமொத்த இணைய உலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

அராய் வழங்கிய சான்றின்படி, ஸ்கோடா குஷாக் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 15.78 கிமீ முதல் 19.76 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஸ்கோடா குஷாக் காரை பயன்படுத்தி வரும் நபர், தன்னுடய கார் மாடல் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 20.7 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறியிருந்தார்.

Skoda kushaq facelift

இதனை ஆதாரப்பூர்வமாக டீம் பிஎச்பி தளத்திலும் அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் அப்டேட் வெர்ஷன் மீதான எதிர்பார்ப்பே தற்போது இந்தியர்கள் பலரிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலே, ஸ்கோடா குஷாக்கின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) 2024 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்கோடா குஷாக் 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திலேயே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாக ஓர் வாகனம் விற்பனைக்கு வந்த பின்னர் அடுத்த மூன்றாவது ஆண்டு அல்லது அதற்கு ஆண்டுகளில் அதன் அப்டேட் வெர்ஷன் விற்பனைக்குக் களமிறக்கப்படும். இதன் அடிப்படையிலேயே ஸ்கோடா குஷாக் கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் 2024 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கார் புதுப்பிக்கப்படும் என்றால் சில புதிய அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். அந்தவகையில், கிரில், பம்பர் ஆகியவற்றில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அத்துடன், சில புதிய அம்சங்களை அப்டேட் செய்யப்படும் குஷாக் காரில் எதிர்பார்க்கலாம். அந்தவகையில், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பன்முக டிரைவிங் மோட்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

இத்துடன், ஆச்சரிய பரிசாக இந்த கார் மாடலில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அடாஸ் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகிய தொழில்நுட்பங்களை ஸ்கோடா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை ஸ்கோடா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி, தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் ஸ்கோடா குஷாக் கார் மாடலில் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10 அங்குல அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்ட இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், 6 ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இரண்டுமே பெட்ரோல் மோட்டார் மட்டுமே ஆகும். 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டும் சிறந்த திறன் மற்றும் மைலேஜை வழங்கக் கூடியவை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பிரீமியம் கார் பிரியர்கள் மத்தியில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி-க்கு கணிசமான நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், போன மாதத்தில் இந்த வரவேற்பு லேசாக குறைந்துள்ளது. எனவே குறைவை சமாளிக்க, அதாவது, விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய ஸ்கோடா குஷாக்கின் அப்டேட் வெர்ஷன் விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 17:20 [IST]
English summary
Skoda kushaq facelift launch expected 2024
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+