மைலேஜை வாரி வழங்கும் காரை கண்டுகொள்ளாத இந்தியர்கள்.. இதுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?

ஸ்கோடா (Skoda) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாக குஷாக் (Kushaq) இருக்கின்றது. இந்த கார் மாடலே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஆகும். ஆனால், இப்போது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த கார் மாடல் மட்டும் 2,162 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தன.

ஆனால், இந்த ஆண்டு ஏப்ரலிலோ மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை அது சந்தித்து உள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் மட்டும் வெறும் 1,159 யூனிட்டுகள் குஷாக் கார் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல் ஆகும். சமீபத்தில்கூட குஷாக் கார் பயன்பாட்டாளர் ஒருவர் இதனை ஆதாரப்பூர்வமாக கூறியிருந்தார்.

Skoda kushaq sales report

இத்தகைய கார் மாடலே விற்பனையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது. இது அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல் மட்டுமல்ல அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலும்கூட. மேலும் பாதுகாப்பு அம்சங்களும் இந்த கார் மாடலில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், அது இந்தியர்களைக் கவர தவறிவிட்டது.

இந்த கார் மாடலில் இரண்டு விதமான பெட்ரோல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகியவை அவை ஆகும். இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இதேபோல், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு லிட்டருக்கு 15.78 கிமீ முதல் 19.76 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது அராய் வழங்கிய சான்றின்படியான மைலேஜ் விபரம் ஆகும்.

அதேவேளையில் சமீபத்தில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட குஷாக் பயன்பாட்டாளர் ஒருவர் தன்னுடைய குஷாக் லிட்டர் ஒன்றிற்கு 20.7 கிமீ வரை மைலேஜ் தருவதாக ஆதாரத்துடன் தெரிவித்திருந்தார். இத்தகைய மைலேஜ் தரும் காரே சென்ற ஆண்டைவிட தற்போது குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றது.

குஷாக் கார் தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க், எலெக்ட்ரிக் சன்ரூஃரப், 10 அங்குல அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், 6 ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இரட்டை ஏர்பேக்கு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர் இருக்கைக்கான மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன் வசதி, எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் மற்றும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட ஓர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். கவர்ச்சியான தோற்றத்திற்கும் இந்த கார் அறியப்படுகின்றது. இதனால்தான் சில பணக்காரர்கள் தங்களின் பிரதான பயணங்களுக்கு இந்த பிரீமியம் எஸ்யூவி கார் மாடலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 12:55 [IST]
English summary
Skoda kushaq sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+