என்னது இந்த கார் மாடல் சொன்னதைவிட அதிகம் மைலேஜ் தருதா!.. ஸ்கோடா குஷாக் எஸ்யூவி-யின் நிஜ உலக மைலேஜ் திறன்!

ஸ்கோடா (Skoda) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக குஷாக் (Kushaq) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த எஸ்யூவி ரக கார் மாடலே சொன்னதைவிட அதிக மைலேஜை வழங்குகிறது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை குஷாக் கார் மாடலின் உரிமையாளர் ஒருவரே ஆதாரத்துடன் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பொதுகவாக உற்பத்தி நிறுவனங்கள் வாக்குறுதி வழங்குவதைவிட சற்று குறைவான மைலேஜையே அந்த குறிப்பிட்ட வாகனங்கள் வழங்கும். ஆனால், ஸ்கோடாவின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான குஷாக் நிறுவனம் சொன்னதைவிட சற்று அதிக மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்கோடா குஷாக் ஒரு லிட்டருக்கு 15.78 கிமீ முதல் 19.76 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

Skoda kushaq 1 0l tsi at fuel efficiency

Source: Team BHP அராய் வழங்கிய சான்றின்படியான மைலேஜ் விபரம் இதுவாகும். இதைவிடவே அதிக மைலேஜை ஸ்கோடா குஷாக் வழங்கும் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கு 20.7 கிமீ வரையில் அது மைலேஜ் தரும் என்பதே தெரிய வந்துள்ளது. 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆப்ஷனே இந்த அளவு அதிக மைலேஜை வழங்கி இருக்கின்றது.

அது அளவில் சிறியதாக இருந்தாலும், நிறுவனம் சொன்னதைவிட அதிக மைலேஜ் என்பதால் பலருடைய ஆச்சரியத்திற்கு காரணமாக இந்த கார் மாடல் மாறியிருக்கின்றது. நொய்டாவைச் சேர்ந்த அந்த இளைஞர், தன்னுடைய ஸ்கோடா குஷாக் காரில் 51.96 லிட்டர் பெட்ரோலை நிரப்பி இருக்கின்றார். இதைக் கொண்டு அவர் 1076 கிமீ தூரம் வரை பயணித்திருக்கின்றார்.

Petrol bill

இந்த ஒட்டுமொத்த பயணத்தில் 60 சதவீதம் பயணம் எக்ஸ்பிரஸ் சாலையிலும், மீதமுள்ள 40 சதவீத பயணம் நகர்புற சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மேலும், சில நேரங்களில் மணிக்கு 40 கிமீட்டருக்கும் குறைவான வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்கும்போது மணிக்கு 80 கிமீ முதல் 100 கிமீ வேகத்திலும் அவர் பயணித்திருக்கின்றார்.

மேலும், பயணம் முழுக்க ஏசி-யையும் ஆன் செய்தபடி ஓவர் காரை பயன்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையிலேயே 1076 கிமீ மைலேஜை அவர் பெற்றிருக்கின்றார். தன்னுடைய காருக்கு எச்பி பவர் 95 ஆக்டேன் வகை பெட்ரோலை அவர் நிரப்பி வந்திருக்கின்றார். இதுவும், அவர் அதிக மைலேஜை பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

Skoda kushaq fuel efficiency

இதற்கான அனைத்து தரவுகள் மற்றும் ஆதாரங்களையும் அவர் பகிர்ந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்கோடா குஷாக் இரண்'டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் பெட்ரோல் ஆப்ஷன்கள் மட்டுமே ஆகும். 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகியவை அவை ஆகும்.

மைலேஜ் தருவதில் மட்டுமல்ல தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் மிக சிறந்ததாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. அன்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் குஷாக் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், எலெக்ட்ரிக் சன்ரூஃரப், 10 அங்குல அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், 6 ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இரட்டை ஏர்பேக்கு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர் இருக்கைக்கான மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன் வசதி, எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற இன்னும் பல தரமான அம்சங்களை ஸ்கோடா குஷாக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால்தான் இந்த கார் மாடலுக்கு பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 15:07 [IST]
English summary
Skoda kushaq suv real world mileage
மேலும்... #ஸ்கோடா #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X