இந்தியால ஒரு காருக்கு புக்கிங் குவியுது.. 10 நாட்கள்ல இவ்ளோ கிடைச்சிருக்குனு சொன்னா யாருமே நம்பவே மாட்றாங்க!

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு மிக சமீபத்திலேயே புக்கிங் பணிகள் தொடங்கின. கடந்த 2ஆம் தேதி அன்றே புக்கிங்கை ஏற்கும் பணிகளை ஸ்கோடா தொடங்கியது. இந்த நிலையிலேயே புக்கிங்கில் இந்த கார் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, புக்கிங் பணிகள் தொடங்கிய பத்தே நாட்களில் 10 ஆயிரம் புக்கிங்குகளை இந்த கார் மாடல் குவித்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் கைலாக்-இன் டெலிவரி பணிகளை சீக்கிரமே தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது. ஜனவரி 27 ஆம் தேதி முதலே கைலாக்-இன் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே மாபெரும் எண்ணிக்கையில் புக்கிங்கை பெற்று அனைவரின் வாயையும் பிளக்கச் செய்திருக்கின்றது, கைலாக்.

Skoda kylaq bags 10 000 bookings

இந்தியா மார்க்கெட்டை வளைத்து போட வேண்டும் என்கிற நோக்கிலேயே ஸ்கோடா நிறுவனம் கைலாக் கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. அது எதிர்பார்த்தது இப்போதே நடக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு சான்றாகவே தற்போது வெளியாகி இருக்கும் புக்கிங் பற்றிய விபரங்கள் அமைந்திருக்கின்றன. இந்த காருக்கு மிக குறைவான விலையே நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.

ரூ. 7 லட்சத்து 89 ஆயிரம் என்கிற குறைவான ஆரம்ப விலையே கைலாக் எஸ்யூவி காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 14 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

Skoda kylaq front view

மேலும், அறிமுகத்தை முன்னிட்டே இவ்வளவு குறைவான விலைகளை ஸ்கோடா நிர்ணயம் செய்திருக்கின்றது. ஆனால், முதல் 33,333 வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த குறைவான விலையில் கைலாக் காரை வாங்கிக் கொள்ள முடியும். ஆகையால், இந்த குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பின்னர் கைலாக் காரின் விலைகள் உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்த நிலையும் அக்காருக்கு இப்போதே புக்கிங் குவிய காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனம் கைலாக் காரை இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவை மையப்படுத்தியே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பிரிவிற்கு இந்தியாவில் செம டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே கைலாக்கை ஸ்கோடா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை புதிய கைலாக் கார் மாடலில் ஒற்றை ஆப்ஷனே வழங்கப்பட இருக்கின்றது. அது 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் மட்டுமே ஆகும்.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎச்பி (85 kW) பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. கியர்பாக்ஸைப் பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனே வழங்கப்பட இருக்கின்றது.

கைலாக் ஆற்றலை வெளியேற்றுவதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் மனதைக் கவரக் கூடியதாகவே இருக்கின்றது. அந்தவகையில், 10.1 இன்ச் அளவுக் கொண்ட தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 அங்குல அளவுக் கொணட் விர்சுவல் காக்பிட், க்ளைமேட் கன்டரோல், ஆட்டமோட்டிக் ஹெட்லேம்ப், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே - ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை கைலாக்-இல் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காரின் வருகை சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையே அதன் புக்கிங் எண்ணிக்கையின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. மேலும், வரும் நாட்களில் விற்பனையில் மாபெரும் சாதனைகளை கைலாக் படைக்கும் என்பதும் இப்போதே தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2024, 22:37 [IST]
English summary
Skoda kylaq achieves remarkable 10 000 bookings in just 10 days price and features details
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+