ரூ. 7.89 லட்சம் விலை கொண்ட காருக்கு புக்கிங் தொடங்கியது.. 3 வருஷத்துக்கு மெயின்டனன்ஸ் வேற ஃப்ரீயாம்..

இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த கார் மாடலுக்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அத்துடன். கார் மாடலின் முழு விலை விபரத்தையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஸ்கோடா (Skoda) நிறுவனம், அதன் புதுமுக கார் மாடலான கைலாக் (Kylaq)-கிற்கே புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. இதன் முழு விலை விபரத்தையும்கூட அது அறிவித்திருக்கின்றது. முன்னதாக இதன் ஆரம்ப விலையை மட்டுமே அறிவித்து இருந்தது, ஸ்கோடா நிறுவம். ரூ. 7.89 லட்சமே கைலாக் காரின் ஆரம்ப விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் அதிகபட்ச விலை ரூ. 14.40 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். மேலும், அறிமுகத்தை முன்னிட்டே இந்த விலைகளை ஸ்கோடா நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, அறிமுகத்தை முன்னிட்டே இந்த குறைவான விலையில் கைலாக் எஸ்யூவி காரை ஸ்கோடா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Skoda kylaq bookings open

ஆகையால், விரைவில் இதன் விலைகள் உயர்த்தப்படும் என தெரிகின்றது. இத்தகைய காருக்கே தற்போது புக்கிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக ஸ்கோடா தொடங்கி இருக்கின்றது. கைலாக் ஓர் அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கிய சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இது இந்தியாவில் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் ஆகியவையே அவை ஆகும். இந்த காருக்கு குறைவான விலையை நிர்ணயித்ததோடு, வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு சிறப்பு சலுகை ஒன்றையும் ஸ்கோடா அறிவித்திருக்கின்றது. இந்த காரை புக் செய்யும் முதல் 33,333 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 3 ஆண்டுகள் மெயின்டனன்ஸ் பேக்கேஜை அது வழங்க இருக்கின்றது.

ஏற்கனவே இந்த காருக்கு 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த காருக்கு 33 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை புதிய கைலாக் கார் மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டார் ஆகும். அதிகபட்சமாக 85 kW பவரையும், 178 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும். கியர்பாக்ஸைப் பொருத்த வரை இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனே வழங்கப்பட இருக்கின்றது.

இத்துடன் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக 6 ஏர்பேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசன், மும்முனைகள் வசதிக் கொண்ட சீட் பெல்ட், டிரைவருக்கான டெட் பெடல், ஆட்டோமேட்டிக் ஸ்பீடு சென்சிட்டீவ் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை இந்த காரில் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.

மிக முக்கியமாக 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 அங்குல விர்சுவல் காக்பிட் (டிரைவர்களுக்கானது), ரியர் வியூ மிர்ரர், க்ளைமேட் கன்டரோல், ஆட்டமோட்டிக் ஹெட்லேம்ப், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வாறு அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும், பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் காண முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சப் 4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவின் மிகப் பெரிய போட்டியாளர்களாக டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் கியா சொனெட் ஆகியவைக் காட்சியளிக்கின்றன. இவற்றிற்கே போட்டியளிக்கும் விதமாக புதிய கைலாக் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி அன்றே இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2024, 17:05 [IST]
English summary
Skoda kylaq bookings now open in india deliveries starting by january 2025
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+