8 லட்ச ரூபா கூட இல்ல.. இந்தியர்கள் எதிர்பார்க்காத குறைவான விலையில் அறிமுகமான ஸ்கோடா கார்..

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda India) ஓர் புதுமுக கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான கைலாக் (Kylaq) கார் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும், இதற்கு யாரும் எதிர்பார்க்காத குறைவான விலையையே அது நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 7.89 லட்சம் விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த கார் மாடலின் முழு விலை பட்டியலையும் அது அறிவிக்கவில்லை. இந்திய சந்தையை கைலாக் காரைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே மிகவும் குறைவான ஆரம்ப விலையை ஸ்கோடா நிர்ணயம் செய்திருக்கின்றது. ஆண்டு ஒன்றிற்கே 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கைலாக் கார்களை விற்பனைச் செய்ய அது திட்டமிட்டு இருக்கின்றது.

Skoda kylaq compact suv launched

இதற்கேற்ப மிக அதிக சிறப்பு வசதிகளை இந்த காரில் ஸ்கோடா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, அழகில் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைப் போலவே அதிக கவர்ச்சியான வாகனமாக கைலாக் காட்சியளிக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஸ்பிளிட் வகை ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், மெல்லிய அமைப்புடைய புதிய கிரில், கட்டுமஸ்தான அமைப்புக் கொண்ட பான்னட் ஆகியவற்றையே இந்த காருக்கு ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.

இதேபோல் இளம் தலைமுறையினர்களைக் கவரக் கூடிய சிறப்பம்சங்களான 10 அங்குல தொடுதிரை சிஸ்டம், 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், க்ளைமேட் கன்ட்ரோல், இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களையும் புதிய கைலாக் எஸ்யூவி-யில் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.

Skoda kylaq compact suv interior

இந்த அம்சங்களும், கவர்ச்சியான தோற்றமுமே கைலாக் காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது. மிக முக்கியமாக இது குறைவான விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், அதன் போட்டி கார் மாடல்களுக்கு நிறுவனம் எதிர்ப்பதைப் போல சிம்ம சொப்பணமாக விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் ஏற்கனவே போட்டி மிக பலமாக உள்ளது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ உள்ளிட்ட கார் மாடல்களே இந்த பிரிவின் மிக சிறந்த போட்டியாளர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

இதுதவிர, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார் மாடல்களும் இந்த மார்க்கெட்டை தங்கள் வசம் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இத்தகைய கார் மாடல்களுக்கே போட்டியாக கைலாக் தற்போது களமிறங்கி இருக்கின்றது. ஸ்கோடா நிறுவனத்தின் 'இந்தியா 2.0' திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரும் மூன்றாவது கார் மாடல் இதுவாகும்.

இந்த காரை அதன் புகழ்பெற்ற 'எம்க்யூபி ஏஓ ஐஎன்' (MQB-A0-IN) பிளாட்பாரத்தை தழுவியே தயார் செய்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகியவை ஆகும். இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதே டிமாண்டே புதிய கைலாக்கிற்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. புதிய கைலாக் காருக்கான புக்கிங் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி முதலே இந்த பணிகள் நாட்டில் தொடங்க இருக்கின்றது. இதேபோல், இதன் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு குறிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஜனவரி இறுதிக்குள் இந்த காரை இந்திய சாலையில் பார்த்துவிட முடியும் என நம்பப்படுகின்றது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரியில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியில் இந்த காரை காட்சிப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை கைலாக் கார் மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட இருக்கின்றது.

இதே மோட்டாரே குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகிய கார் மாடல்களிலும் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 115 எச்பி மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும். முன் வீல் இயக்கம் கொண்ட கார் மாடலே கைலாக் ஆகும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைத் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் பொருட்டே ஸ்கோடா நிறுவனம் இந்த புதிய கைலாக் காரை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. கைலாக், இது சமஸ்கிருதத்தில் கிரிஸ்டல் என்று அர்த்தம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 14:18 [IST]
English summary
Skoda kylaq compact suv launched starting price rs 7 89 lakh deliveries starts from 2025 january 27
மேலும்... #skoda #Skoda Kylaq #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+