முன் இருக்கையில் அமர்பவர்கள் தான் கொடுத்து வெச்சவங்க! ஸ்கோடா கார் வாங்க அதிக பணம் செலவு பண்ண வேண்டியது இல்லை!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க நீண்ட வருடங்களாக போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த 2021ஆம் ஆண்டில் குஷாக்கை அறிமுகப்படுத்திய ஸ்கோடா, அதன் தொடர்சியாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கைலாக் (Kylaq) காரை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. குஷாக் காரில் வழங்கப்பட்டுள்ள நிறைய வசதிகள் கைலாக் காரிலும் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

டச் ஸ்க்ரீன் & டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே (Touchscreen & Digital Driver Display): ஸ்கோடா கைலாக் காரில் 10.1-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை குஷாக் காரிலும் பார்க்க முடியும். இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியதாக உள்ளது. மேலும், குஷாக்கில் வழங்கப்படும் 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவையும் கைலாக்கில் ஸ்கோடா வழங்குகிறது.

skoda kylaq car features

சிங்கிள்-பேன் சன்ரூஃப் (Single-pane Sunroof): இன்றைய கால கஸ்டமர்கள் கார்களில் சன்ரூஃப்-ஐ எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். குஷாக் காரில் இந்த வசதி ஆனது உயர்நிலை ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. ஆதலால், அதேபோல் கைலாக் காரிலும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆனது டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயர்லெஸ் போன் சார்ஜர் (Wireless Phone Charger): கைலாக்கில் வழங்கப்பட்டு இருக்கும் குஷாக்கின் மற்றொரு அம்சம் வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகும். இதன் மூலம், மொபைல் போனை சார்ஜ் செய்ய கேபிள்களை தேடிக் கொண்டிருக்க தேவையில்லை. சன்ரூஃப்-ஐ போலவே, இந்த வசதியும் குஷாக்கின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுவதால், கைலாக்கிலும் டாப் வேரியண்ட்டில் மட்டுமே வயர்லெஸ் போன் சார்ஜர் வசதி எதிர்பார்க்கப்படுகிறது.

skoda kylaq car features

வெண்டிலேட்டட் & பவர்டு முன் இருக்கைகள்: இன்றைய கால மாடர்ன் கார்களில் கூட டிரைவர் இருக்கை மட்டுமே மடக்கும் வசதி உடன் வெண்டிலேட்டட் இருக்கையாக வழங்கப்படுகிறது. ஆனால், ஸ்கோடா நிறுவனம் 2021ஆம் ஆண்டிலேயே அதன் குஷாக் காரில் முன் இருக்கைகள் இரண்டையும் இந்த வசதிகளுடன் அறிமுகப்படுத்தியது. அந்த வகையில், இந்த வசதி கைலாக் காரிலும் தொடரப்பட்டுள்ளது.

பின் இருக்கை பயணிகளுக்கும் ஆட்டோ ஏசி: கைலாக் காரில் சவுகரியத்தில் ஸ்கோடா நிறுவனம் எந்தவொரு குறையும் வைக்கவில்லை. அந்த வகையில், இந்த காரில் பின் இருக்கை பயணிகளுக்கும் தனியாக ஏசி காற்று துளைகள் வழங்கப்பட்டுள்ளன. டேஸ்போர்டில் வழங்கப்படும் பேனல் வாயிலாக கண்ட்ரோல் செய்யப்படும் இந்த வசதி ஆனது குஷாக்கில் இருந்து பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

skoda kylaq car features

க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control): நெடுஞ்சாலைகளில் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும்போது நீண்டதூரத்திற்கு எந்த பக்கமும் திரும்பாமல் நேராக காரை கொண்டு செல்ல க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது டிரைவரின் வேலையை குறைக்கிறது. குஷாக் காரில் மிட்-வேரியண்ட்டில் இருந்து வழங்கப்பட்டுவரும் இந்த வசதி ஆனது கைலாக் காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா & சென்சார்கள்: காரை ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு பார்க்கிங் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் உதவியாக இருக்கும். குஷாக் காரில் சென்சார்கள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. ஆனால், ரியர் பார்க்கிங் கேமரா குஷாக்கின் மிட்-வேரியண்ட்டில் இருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆதலால், கைலாக் காரிலும் இதனை மிட்-வேரியண்ட்டில் இருந்து எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது கைலாக் காரை அறிமுகம் செய்வது போலவே, 2021ஆம் ஆண்டில் குஷாக் காரையும் பயங்கர விளம்பரத்துடன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்திற்கு ஓரளவிற்கு பெயர் வாங்கி கொடுத்ததில் குஷாக்கின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். அந்த வகையில், கைலாக் காரும் ஸ்கோடாவின் நெட்வொர்க்கை இந்தியாவில் விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 17, 2024, 20:26 [IST]
English summary
Skoda kylaq features that borrowed from kushaq car touchscreen sunroof cruise control
மேலும்... #skoda #Skoda Kylaq #skoda kushaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X