இந்தியாவே எதிர்பார்த்த காரின் பெயர் இது தானா? பெயரே இவ்வளவு சூப்பரா இருக்குதே!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த செக்மெண்ட்டில் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஆர்வமாக இருக்கின்றன. இந்நிலையில் ஸ்கோடா நிறுவனமும் இந்த செக்மெண்டில் புதிதாக ஒரு காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது .அந்த காரின் பெயரையும் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இந்த ரக கார்களை தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய வருகிறார்கள். குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் கூட இந்த ரக கார்களை வாங்க விரும்புகிறார்கள். செடான் காருக்கு பதிலாக மக்கள் தற்போது எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்பி வருகிறார்கள்.

Skoda Kylaq

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட கார்களை களம் இறக்கி விற்பனை செய்து வருகின்றன. இந்த காலத்தில் ஏற்கனவே போட்டி பலமாக இருக்கும் நிலையில், ஸ்கோடா நிறுவனமும் தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்த களத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரின் பெயரையும் தற்போது அறிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கைலாக் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

ஸ்கேடா நிறுவனம் இந்தியாவில் தனது பிராண்டை புதுப்பித்து வருகிறது. 2.0 என்ற பெயரில் புதுப்பிக்கப்படும் இந்த பிராண்டில் புதிய தயாரிப்பாக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராக இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்கோடா நிறுவனத்தின் இந்த கைலாக் என்ற கார் குறித்த தகவல்கள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் நாம் எதிர்பார்க்கும் படி இந்த காரில் 1.0லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 114பிஎச்பி பவரையும் 178என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய ஸ்கோடா கைலாக் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரின் விபரங்களை பொருத்தவரை அந்நிறுவனம் பெரிதாக வெளியிடவில்லை. ஆனால் அந்த கார் குறித்து இதுவரை வெளியான டீசர்கள் மற்றும் ஸ்பை புகைப்படங்களை வைத்து நமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கிரில் வடிவமைப்பு முன்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சிறப்பான லுக்கை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பின்பகுதியை பொறுத்தவரை தலைகீழாக வைக்கப்பட்ட எல் வடிவ டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் உட்புறமுள்ள அம்சங்கள் மற்றும் காரில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்த எந்தவிதமான தகவல்களும் இதுவரை இடம் பெறவில்லை. இது குறித்த தகவல்கள் எல்லாம் இந்த காரின் அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செகண்ட் ஏற்கனவே மிகப்பெரிய போட்டியை சந்தித்து வருகிறது. இந்த செக்மெண்டில் ஏற்கனவே மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா, ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யூ, மகேந்திரா நிறுவனத்தின் நிறுவனத்தின் 3எக்ஸ்ஓ, கியா நிறுவனத்தின் சோனட், நிஸான் நிறுவனத்தின் மேக்னைட், ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மற்றும் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் ஆகிய கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த போட்டியுடன் ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் காரும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் போட்டிக்கு வரும் பட்சத்தில் ஸ்கோடா ரசிகர்கள் மத்தியில் இது மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். ஸ்கோடா காருக்கு என இந்தியாவில் தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு நிறுவனம் கைலாக் என பெயர் வைத்துள்ளது பெரும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு விதமான பெயர்களை யோசித்தது கைமாக், கைராக் ,காரிக், குவிக் உள்ளிட்ட பெயர்களை யோசித்து கடைசியாக என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 14:12 [IST]
English summary
Skoda kylaq new compact suv name revealed
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+