முழுசா 8 லட்ச ரூபாகூட விலை கொண்டிராத காருக்கு புக்கிங் தொடங்கியது.. இப்பவே வளச்சு போட ரெடியாகும் இந்தியர்கள்!
இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்களில் ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq)-ம் ஒன்றாகும். இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் தொடக்க விலையை ஏற்கனவே ஸ்கோடா நிறுவனம் அறிவித்துவிட்டது. ரூ. 7.89 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்தே இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை குறைவான காருக்கே இந்தியாவில் தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் ஆகும். விரைவில் இந்த கார் முழு விலை விபரங்களையும் ஸ்கோடா நிறுவனம் அறிவிக்க இருக்கின்றது.
வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதியையே இதற்கான நல்ல நாளாக ஸ்கோடா நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. மேலும், அன்றைய தினமே கைலாக் காரின் புக்கிங் பணிகளையும் அது அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகளை சில டீலர்கள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

மிகக் குறைவான விலையில் ஸ்கோடா கைலாக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதால் இதற்கு மிக சிறப்பான கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இந்த டிமாண்டின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டே டீலர் தரப்பில் முன் கூட்டியே புக்கிங் பணிகள் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த காரின் டெலிவரி பணிகள் ஜனவரி 27 ஆம் தேதி அன்றே தொடங்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஸ்கோடா நிறுவனம் இந்த கைலாக் காரை கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் வளைத்து போட திட்டமிட்டு உள்ளது. சொல்லப்போனால், இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதாா இந்த பிரிவை மையப்படுத்தி கைலாக்கை அது களமிறக்க இருக்கின்றது. குறிப்பாக யாரும் எதிர்பார்த்திராத குறைவான விலையில் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த காரில் பயணிகளுக்கு சுவாரஷ்யமான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களை ஸ்கோடா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், லெதர் போர்த்த ஸ்டியரிங் வீல், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் உள்ளிட்டவற்றையே கைலாக் காரில் ஸ்கோடா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, 8 அங்குல அளவிலான டிரைவர்களுக்கான திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த காரில் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.
இதேபோல், கவர்ச்சியான தோற்றத்திற்கும் சற்றும் குறைச்சல் இல்லாத கார் மாடலாக கைலாக் விளங்குகின்றது. இதற்கேற்ப, பிரத்யேக கிரில் (வண்ணத்து பூச்சியை பிரதிபலிக்கும் தோற்றத்தில் இருக்கும்), ஸ்பிளிட் வகை எல்இடி ஹெட்லைட், 7 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள், டெயில் லைட் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் அழகாகத் தென்பட வேண்டும் என்பதற்காக ஸ்கோடா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் ஒற்றை ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும். கியர்பாக்ஸைப் பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தேர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் வருகை இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ளது. மிக முக்கியமாக மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)-விற்கு இந்த காரின் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








