இந்த காரோட விலை இவ்ளோதான் இருக்குமா! எழுதி வெச்சுக்கோங்க! மாருதி, டாடா பொழப்புல மண்ணை அள்ளி போட போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்கோடா (Skoda) நிறுவனம், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், புத்தம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் பெயர் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) என கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கோடா கைலக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக ஸ்கோடா கைலக் காரை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்கோடா கைலக் காரில், சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படவுள்ளது என்பதுதான், அந்த தகவல் ஆகும். ஸ்கோடா நிறுவனம் கைலக் காரை தற்போது இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் மூலம், ஸ்கோடா கைலக் காரில், சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Skoda Kylaq

இதுதவிர ஸ்கோடா கைலக் காரில், ஸ்பிளிட் ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறவுள்ளன. இவை எல்லாம் வழங்கப்படவுள்ளது, இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட இந்த காரின் டீசர்கள் மூலமாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.

செயல்திறனை பொறுத்தவரையில் ஸ்கோடா கைலக் காரில், 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

Skoda Compact SUV

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான ஸ்கோடா கார் என்ற பெருமையை கைலக் பெறவுள்ளது. MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் களமிறக்கவுள்ள 3வது கார் கைலக் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

முன்னதாக ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய 2 கார்களும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. மிகவும் குறைவான விலையில் வரவுள்ளதால், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கோடா கார் என்ற பெருமையை, கைலக் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா கைலக் காரின் வருகை, டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2024, 16:15 [IST]
English summary
Skoda kylaq suv to get sunroof launch soon
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+