டீ கடையில வடை சுட்டு தள்ளுவதைபோல கார்களை தயாரித்து தள்ளிய நிறுவனம்.. அத்தனையும் ஒரு வருஷத்துல தயாரிச்சவையா!!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஸ்கோடா (Skoda)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனமே டீ கடையில் மாஸ்டர்கள் வடை, போண்டா போன்ற தின்பண்டங்களைச் சுட்டு தள்ளுவதைப் போல கார்களை தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி எத்தனை யூனிட்டுகளை அந்த நிறுவனம் தயாரித்து இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சக்சஸ்ஃபுல் கார் உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் ஸ்கோடா (Skoda). இது ஓர் செக் குடியரைச் சேர்ந்த முன்னணி கார் (Car) உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே கார்கள் உற்பத்தியில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Skoda kodiaq

8 லட்சத்து 88 ஆயிரம் யூனிட் வாகனங்களையே அது தயாரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான செக் நாட்டில் உள்ள பிளானட்டில் சுமார் 7 லட்சத்து 81 ஆயிரம் யூனிட்டுகள் கார்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. பாக்கி உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரம் யூனிட்டுகள் சர்வதேச அளவில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கோடா வாகனங்களை மட்டுமல்ல வாகனங்களுக்கான சில முக்கிய பாகங்களையும் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், பிஎச்இவி மற்றும் எம்இபி வாகனங்களுக்கான பேட்டரி சிஸ்டம், வாகனங்களுக்கான ஆக்சில்கள் மற்றும் எஞ்சின்கள் உள்ளிட்டவற்றையும் ஸ்கோடா தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே உலக அளவில் அது 8 லட்சத்து 88 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி என அசாத்தியமான சாதனையை ஸ்கோடா படைத்திருக்கின்றது.

இந்த நிறுவனம் சமீபத்திலேயே வியட்நாம் சந்தையில் அதன் கால்தடத்தை பதித்தது. அத்துடன், கஜகஸ்தானில் தன்னுடைய உற்பத்தி பணிகளைத் தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் முக்கிய கார் மாடல்களாக ஃபேபியா, ஸ்கேலா, ஆக்டேவியா, ஆக்டேவியா ஐவி, காமிக், என்யாக் மற்றும் என்யாக் கூபே உள்ளிட்டவை இருக்கின்றன.

இவை மட்டுமே 5 லட்சத்து 56 யூனிட்டுகள் இதுவரை தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை லாடா போலெஸ்லவ்வில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இது தவிர இதே ஆலையில் வைத்து 349,021 எம்க்யூ100 மற்றும் எம்க்யூ200 மேனுவல் டிரான்ஸ்மிஷன்களும், 1,736,815 யூனிட்டுகள் ஆக்சில்களும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 469,935 இஏ 211 வகை எஞ்சின்களும் அந்த ஆலையில் வைத்தே தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் சில ஃபோக்ஸ்வேகன் குரூப்பில் உள்ள மற்ற பிராண்டுகள் வாகனங்களுக்காக தயாரிக்கப்பட்டவையும் அடங்கும். மேலும், 165,606 பேட்டரி சிஸ்டம் எம்இபி வாகனங்களுக்காகவும், 147,625 யூனிட்டு பேட்டரி சிஸ்டம்கள் பிளக் இன் ஹைபிரிட் வகை கார்களுக்காகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

உற்பத்தி திறன் பலமடங்கு அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையிலேயே இந்த பிரமாண்ட எண்ணிக்கையில் வாகனங்களையும், வாகனங்களுக்கான முக்கிய கூறுகளையும் செக்-இல் உள்ள ஆலை உற்பத்தி செய்து தள்ளி இருக்கின்றது. இதேபோல், க்வாசினி-யில் உள்ள ஆலையில் வைத்து 225,000 யூனிட்டு வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

அதில், கரோக், கோடியாக், சூப்பர்ப் மற்றும் சூப்பர் ஐவி ஆகியவை அடங்கும். இதேபோல், இந்தியாவில் வைத்து ஸ்கோடா நிறுவனம் 52 ஆயிரம் யூனிட்டுகளை தயார் செய்திருக்கின்றது. இந்தியாவில் மட்டும் நிறுவனத்திற்கு இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. ஒன்று புனேவிலும் மற்றொன்று அவுரங்காபாத்திலும் உள்ளது.

இதில், புனேவில் உள்ள ஆலையிலேயே மிக அதிக அளவில் வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. சுமார் 48 ஆயிரம் யூனிட் வாகனங்கள் புனேவிலும், தோராயமாக 4,400 யூனிட்டுகள் அவுரங்காபாத்திலும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரீமியம் தரம் நிறைந்தது என்பதால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஸ்கோடா பிராண்ட் கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புனேவில் ஸ்லேவியா மற்றும் குஷாக் ஆகிய கார் மாடல்களையும், அவுரங்காபாத்தில் ஆக்டேவியா, சூப்பர்ப் மற்றும் கோடியாக் ஆகிய கார் மாடல்களையும் ஸ்கோடா நிறுவனம் தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. மேலும், பார்த்த யூனிட்டுகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டவை ஆகும். இதனால்தான் இந்த தகவல் தற்போது மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 11:42 [IST]
English summary
Skoda produced 8 88 lakh units of cars globally
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+