ஸ்கோடா ஆக்டேவியாவா இது! யாருமே எதிர்பாக்காத அம்சங்களுடன் மீண்டு வந்திருக்கு! செடான் மார்கெட்டை காலி பண்ண தயார்
இந்தியர்களின் பிரியமான ஸ்கோடா (Skoda) கார் மாடல்களில் ஆக்டேவியா (Skoda Octavia)-வும் ஒன்றாகும். இது ஓர் செடான் ரக கார் (Sedan car) மாடல் ஆகும். இது சற்று விலை உயர்ந்த காராக இருந்தாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே அதற்கு கிடைத்தது.
பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மற்றும் கவர்ச்சியான உடல்வாகை ஆக்டேவியா கொண்டிருந்ததே அதன் வரவேற்பிற்கு பின்னால் இருந்த முக்கிய காரணமாகும். இதன் விளைவாகவே சுமார் 1 லட்சம் யூனிட் விற்பனையை அந்த கார் எட்டியது. இருப்பினும், இந்த காரை இந்தியாவில் விற்பனையில் இருந்து அகற்றியது, ஸ்கோடா.

கடுமையான மாசு உமிழ்வு விதி காரணமாகவே இந்த கார் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது. இது விற்பனையில் இருந்து அகற்றப்பட்டாலும், இந்திய சொகுசு கார் விரும்பிகளின் மனதில் இருந்து இந்த கார் நீங்காமல் உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.
முன்பு விற்பனையில் இருந்து ஆக்டேவியாவைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய காராகவே அது தற்போது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. சொல்லப் போனால் புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் மைல்டு ஹைபிரிட் போன்ற சூப்பரான தொழில்நுட்ப வசதிகளைக் கூட ஸ்கோடா சேர்த்திருக்கின்றது.

ஆகையால், புதிய ஸ்கோடா ஆக்டேவியாக அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜை வழங்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க டிசைனிலும் நிறுவனம் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. எல்இடி ஹெட்லைட், முன் பக்க பம்பர் ஆகியவற்றில் லேசான சீர் திருத்தங்களை ஸ்கோடா செய்திருக்கின்றது.
இது அக்காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதேபோல், காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், புதிதாக 13 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையுடன் ஆப்ஷனல் சிறப்பம்சமாக சாட் ஜிபிடி ஏஐ டெக்னாலஜி வழங்கப்படுகின்றது.

இது வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதிக் கொண்டது. ஆகையால், இந்த கார் பயன்பாட்டாளர்களுக்கு மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதைத்தொடர்ந்து, புதிதாக ஃபோன் பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 15 வாட் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதிக் கொண்ட பாக்ஸ் ஆகும்.
இங்கு செல்போனை வைத்தாலே அது சார்ஜாக தொடங்கிவிடும். இத்துடன், கூலிங் மற்றும் ஹீட் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, யுஎஸ்பி சி போர்ட்டும் 45 வாட் பவர் அவுட்புட் வசதியுடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் எஞ்சினிலும் சில மாற்றங்களை ஸ்கோடா செய்திருக்கின்றது.

அதிக வெப்பம் தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்கவும் அதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜர் மோட்டாரில் மறு சீரமைப்பு செய்திருக்கின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதியையும் இந்த காரில் அது வழங்குகின்றது. அதேவேளையில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படும் என ஸ்கோடா அறிவித்திருக்கின்றது.
இவற்றுடனேயே 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜியையும் அதீத எரிபொருள் சிக்கனத்திற்காக ஸ்கோடா புதிய ஆக்டேவியாவில் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, இதே ஆக்டேவியாவில், டர்போசார்ஜட் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனையும் ஸ்கோடா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இத்தகைய வசதிகளுடனயே தற்போது புதிய ஆக்டேவியாக வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் ஸ்லேவியா, குஷாக் மற்றும் கோடியாக் ஆகிய கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் ஃபேஸ்லிஃப்ட் ஆக்டேவியா மற்றும் என்யாக் ஐவி எலெக்ட்ரிக் கார் ஆகியவை இணைய இருக்கின்றன. இந்த கார்கள் அடுத்தடுத்து என வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









