நாளை அறிமுகமாகுது பிரீமியம் கார் காதலர்கள் எதிர்பாத்து காத்து கொண்டிருக்கும் கார்! ஒரு நடிகரின் துணையோட வருது!

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq), பிரீமியம் கார் காதலர்களின் வாய் அசைப் போட்டுக் கொண்டிருக்கும் ஓர் பெயரே இதுவாகும். இது ஓர் பிரீமியம் தர எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஸ்கோடா நிறுவனம் அதன் 'எம்க்யூபி-ஏ0-ஐஎன்' (MQB-A0-IN) பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கும் மூன்றாவது கார் மாடல் இது ஆகும். இந்த வாகனத்தையே நாளைய (நவம்பர் 6) தினம் ஸ்கோடா நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. நாளைய தினம் அரங்கேற இருப்பது உலக அளவிற்கான வெளியீடு நிகழ்வாகும்.

இந்த காரை ஓர் நடிகரின் துணையுடனேயே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஸ்கோடா. இந்த உலக வெளியீட்டைத் தொடர்ந்து அடுத்த சில காலத்திற்குள்ளாகவே இந்தியாவில் கைலாக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும். இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, இந்த கார் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் அல்லது அதற்குள்ளாகவே கைலாக் விற்பனைக்கு விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

Skoda kylaq unveiling tomorrow

கைலாக் ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து கார் மாடல்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த பிரிவின் மிக சிறந்த ஆட்டக்காரர்களாக டாடாவின் நெக்ஸான், மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா மற்றும் கியாவின் சொனெட் ஆகிய கார் மாடல்கள் இருக்கின்றன.

இத்தகைய ஜாம்பவான் போட்டியாளர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஸ்கோடா நிறுவனம் அதன் கைலாக் எனும் புதிய வீரரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை ஓர் நடிகரின் துணையுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கோடா நிறுவனம் தற்போது புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

Skoda kylaq tail light

வீடியோவில் காரை அங்கம் - அங்கமாகவும் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, அந்த நடிகர் காரை கன்டெய்னருக்குள் சென்று பார்ப்பது போன்ற காட்சிகளையும் ஸ்கோடா வெளியிட்டு இருக்கின்றது. வீடியோவில் தோன்றி இருப்பவர் ரோஹித் ஷெட்டி என தெரிகின்றது. நிறுவனத்தின் சமீபத்திய பதிவும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மேலும், நவம்பர் 12.30 மணி அளவில் ஜியோ சினிமா வாயிலாகவே இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. பலதரப்பட்ட நவீன கால அம்சங்கள் உடன் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அந்தவகையில், புதிய கைலாக் கார் மாடலில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மிக முக்கியமாக அட்ஜெஸ்டபிள் பின்பக்க ஏசி துவாரங்கள் மற்றும் டைப் சி யுஎஸ்பி சார்ஜர் போன்ற அம்சங்களும் ஸ்கோடா கைலாக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற அம்சங்கள் இந்த கார் மாடலின் உயர்நிலை வேரியண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் மாடல் மிக சிறந்ததாக இருக்கும் என நம்பப்படுகின்றது. 6 ஏர் பேக்குகள், இபிடி, ஏபிஎஸ், ரோல் ஓவர் புரடெக்சன், மோட்டார் ஸ்லிப் ரெகுலேசன், டிராக்சன் மற்றும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களே இந்த கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் கார் மாடல்களில் கைலாக்-ம் ஒன்றாகும். இந்த காரை போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கக் கூடிய விலையிலேயே ஸ்கோடா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ரூ. 8 லட்சம் அல்லது ரூ. 10 லட்சம் அதற்கும் குறைவான விலையிலே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 11:58 [IST]
English summary
Skoda s new subcompact suv car kylaq to be unveiling tomorrow rival of tata nexon
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+