இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-four Metre Compact SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
தற்போதைய நிலையில் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) உள்ளிட்ட கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த கார்களுக்கு எல்லாம் போட்டியாக புத்தம் புதிய கார் ஒன்று விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அது ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார் ஆகும். ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

கூடிய விரைவில் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 10 பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒரு பெயர் சூட்டப்படும். இந்த பெயர்கள் எல்லாம் பொதுமக்கள் பரிந்துரைத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், ஸ்கோடா நிறுவனம் தனது புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு ஒரு பெயரை பரிந்துரைக்கும்படி, பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டது.
இந்த பெயர்கள் எல்லாம் K-ல் ஆரம்பித்து Q-ல் முடியும்படி இருக்க வேண்டும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே பொதுமக்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு பல்வேறு பெயர்களை பரிந்துரைத்தனர். இதில், 10 பெயர்களை ஸ்கோடா நிறுவனம் தற்போது இறுதி செய்துள்ளது.

அவை கயாக் (Kayaq), க்ளிக் (Kliq), கார்மிக் (Karmiq), காயிக் (Kaiq), காஸ்மிக் (Kosmiq), கைரோக் (Kyroq), காரிக் (Kariq), க்விக் (Kwiq), கைமேக் (Kymaq) மற்றும் கைலாக் (Kylaq) ஆகியவை ஆகும். இதில் இருந்து ஒரு பெயர் தேர்வு செய்யப்பட்டு, ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு சூட்டப்படும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி-மார்ச் இடையிலான காலகட்டத்தில், இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின்தான், ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை போல், ஏற்கனவே போட்டி அனல் பறந்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் வரவுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார், போட்டியை இன்னும் கடுமையாக்கவுள்ளது என்பதுதான் எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








