இவ்ளோ ரூபாயை குறைச்சுட்டாங்களா!.. ஹூண்டாய் கிரெட்டாவும், கியா செல்டோஸ்-ம் விற்பனையான மாதிரிதான்!

முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் குறிப்பிட்ட கார் மாடல்கள் சிலவற்றின் விலையைக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்கோடா (Skoda) நிறுவனம் அது ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் மிட்சைஸ் செடான் (Mid-Size Sedan) வாகன பிரிவில் ஸ்லேவியா (Slavia) எனும் மாடலையும், மிட்சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) கார் பிரிவில் குஷாக் (Kushaq) கார் மாடலையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் விலையையே ஸ்கோடா நிறுவனம் தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ. 1 லட்சம் வரையே குறைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இறுதி நாள் பற்றிய துள்ளியமான தகவலை அறிய முடியவில்லை. இரண்டு கார் மாடல்களின் அனைத்து தேர்வுகளின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

Skoda price cut

இதன் விளைவாகவே தற்போது ஸ்கோடா குஷாக் கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 10.89 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ. 18.79 லட்சமாகவும் மாறி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக உள்ள ஸ்லேவியாவின் ஆரம்ப விலையும் குறைந்திருக்கின்றது. அது தற்போது ரூ. 10 லட்சத்து 69 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 18.69 மட்டுமே ஆகும்.

ஸ்கோடா குஷாக்: இந்த காரை கிளாசிக், ஓனிக்ஸ், சிக்னேச்சர், மோன்டே கர்லோ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய வேரியண்டுகளிலேயே ஸ்கோடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா (Kia Seltos) மற்றும் கியா செல்டோஸ் (Hyundai Creta)க்கு போட்டியாக கொண்டு வரப்பட்டதே இந்த கார் மாடல் ஆகும்.

இந்த விலை குறைப்பு போட்டியை இன்னும் இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டுமே பெட்ரோல் ஆப்ஷன்கள்தான். 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும்.

இந்த இரண்டும் சிறந்த திறன் மற்றும் மைலேஜை வழங்கக் கூடியவை. இத்துடன், கியர்பாக்ஸ் ஆப்ஷனாக மேனுவல் மற்றும் ஆட்டோமோட்டிக் இந்த இரண்டும் குஷாக் கார் மாடலில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலில் சிறப்பம்சங்களையும் ஸ்கோடா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிர்ரர் லிங்க், எலெக்ட்ரிக் சன்ரூஃரப், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, டிஸ்க் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன், எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப், காரின் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் குஷாக் காரில் வழங்கப்பட்டு உள்ளன.

ஸ்கோடா ஸ்லேவியா: இந்தியாவில் அதிகம் பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் சிறந்த மிட்-சைஸ் செடான் ரக கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.63 லட்சமாக முன்பு இருந்தது. இந்த நிலையிலேயே ரூ. 94 ஆயிரம் வரை இதன் விலையில் குறைக்கப்பட்டு உள்ளது.

எனவே தற்போது ரூ. 10.69 லட்சத்திற்கு இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 18.69 லட்சம் மட்டுமே ஆகும். ஸ்லேவியாப் பொருத்த வரை கிளாசிக், சிக்னேச்சர் மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இத்துடன், குஷாக் மாடலில் வழங்கப்படும் அதே மோட்டார் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இதிலும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் குஷாக் மற்றும் ஸ்லேவியாவின் விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இந்த விலைக் குறைப்பைச் செய்திருக்கின்றது. குறிப்பாக, தன்னுடைய போட்டியாளர்களுக்கு கூடுதல் போட்டியை வழங்கும் பொருட்டு இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. இந்த விலைக் குறைப்பிற்கு பின்னால் சிறப்பம்சம் குறைப்பு போன்ற ஏதேனும் இருக்குமோ நினைக்க வேண்டாம். அந்த மாதிரியான எந்தவேலேயையும் அது செய்யவில்லை என்றே கூறப்படுகின்றது. அதாவது, விலை குறைப்பின் காரணமாக அமைப்பு, அம்சங்கள் அல்லது தரம் உள்ளிட்டவற்றில் எந்தவொரு சமரசத்தையும் அது செய்யவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 5:00 [IST]
English summary
Skoda slavia and kushaq prices drop by rs 1 lakh for limited time
மேலும்... #skoda #skoda kushaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+