ரொம்ப நல்ல கார் ஆச்சே! சொல்லாம கொள்ளாம திடீர்னு விற்பனையை நிறுத்தீட்டாங்க! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய 2 கார்களும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்களின் விற்பனையை ஸ்கோடா நிறுவனம் சத்தமே இல்லாமல் நிறுத்தியுள்ளது. எனவே இனி ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய 2 கார்களின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.

ஒருவேளை ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய 2 கார்களிலும், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வேண்டும் என நீங்கள் விரும்பினால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

Skoda Kushaq

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்/6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது, அதன் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேரியண்ட்கள் கார் ஆர்வலர்கள் அதிகம் விரும்ப கூடியவையாக இருந்தன. ஆனால் இந்த வேரியண்ட்கள் போதிய அளவில் விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது.

Skoda Slavia

இதன் காரணமாகவே இந்திய சந்தையில் ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய 2 கார்களின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்களின் விற்பனையை ஸ்கோடா நிறுவனம் சத்தமே இல்லாமல் திடீரென நிறுத்தி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் கூடிய விரைவில் கைலக் (Skoda Kylaq) என்ற புத்தம் புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது ஓரளவிற்கு குறைவான விலையில் வரக்கூடிய காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் ஆகும். இதன் மேனுவல் வேரியண்ட்களுக்கு, இந்திய சந்தையில் மிகப்பெரிய 'டிமாண்ட்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஸ்கோடா நிறுவனம் கைலக் காரின் மேனுவல் வேரியண்ட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். அந்த சமயத்தில், பெரிய அளவில் 'டிமாண்ட்' இல்லாத ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்களையும் உற்பத்தி செய்து கொண்டிருந்தால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே கைலக் காரின் உற்பத்தியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கூட, ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணங்கள் எதையும் ஸ்கோடா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 13:09 [IST]
English summary
Skoda slavia kushaq 1 5 litre 6 speed mt variants discontinued in india full details
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+