திடீரென விலை உயர்வை அறிவித்த ஸ்கோடா! இனி இந்த காரை வாங்க அதிக பணம் கொடுக்கனும்!

ஸ்கோடா இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஸ்லாவியா காரின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து ரூபாய் 2.61% வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் ஆரம்ப விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தரமான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் கணிசமான அளவு இந் நிறுவனம் இந்தியாவில் மார்க்கெட்டை வைத்துள்ளது.

skoda slavia price hike

இந்நிலையில் ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா காருக்கான விலையை அதிகரித்துள்ளது. புதிய விலை குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனம் 2.61 சதவீதம் வரை அதாவது ரூபாய் 35 ஆயிரம் வரை காரின் விலையை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வேரியன்ட் வாரியாக விலை வேறுபாடு இருக்கிறது. சில வேரியன்ட்கள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வேரியன்டில் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது.

ஸ்கோடா ஸ்லாவியா காரை பொறுத்தவரை மார்க்கெட்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் எந்தவிதமான விலை உயர்வும் அறிவிக்கப்படவில்லை.

skoda slavia price hike

வேரியன்டைபொறுத்தவரை பேஸ் மாடலான ஆக்டிவ் மேனுவல் வேரியன்ட் ரூபாய் 10 ஆயிரம் விலை அதிகரித்து தற்போது ரூபாய் 11.63 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அடுத்ததாக அம்பிஷன் மேனுவல் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 35 ஆயிரம் அதிகரித்து, ரூபாய் 13.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இதனால் இந்த காரின் அடிப்படை விலையாக இருந்த ரூபாய் 1.53 லட்சம் என்பது தற்போது 1.63 லட்சமாக உயர்ந்துள்ளது. அடுத்ததாக மக்கள் அதிகம் விரும்பும் ஆம்பிஷன் மேனுவல் காரின் விலையும் அதிகரித்துள்ளது. அதே நேரம் ஸ்டைல் வேரியண்டில் என்எஸ்ஆர் மேனுவல், மேட் மேனுவல், ஸ்டைல் மேனுவல் ஆகிய மூன்று வேரியன்ட்களிலும் விலை மாற்றம் எதுவும் இல்லை.

skoda slavia price hike

அடுத்ததாக அம்பிஷன் டிசி வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 35,000 விலை அதிகரித்து ரூபாய் 15.08 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுதான் அதிகபட்சமாக 2.38 சதவீதத்தில் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த வேரியன்ட்களிலும் விலை உயர்வு என்பது இல்லை. இதுவரை எந்த விலையில் விற்பனையாகி வந்ததோ அந்த விலையிலேயே விற்பனையாகி வருகிறது.

1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியன்டை பொறுத்தவரை அனைத்து வேரியன்ட்களிலும் எந்தவிதமான விலை வித்தியாசமும் இல்லாமல் பழைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த காரின் ஆரம்ப விலையாக ரூ11.63 லட்சமாகவும் அதிகபட்ச விலையாக ரூ19.11 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு மார்க்கெட் இருக்கிறது. இந்த காரின் விற்பனை கணிசமான அளவு இருப்பதால் இந்நிறுவனம் இந்த காரை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த காரின் விலையை அதிகரித்துள்ளது இதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் விலை ஏற்றம் இல்லை என்பதால் பிரச்சினை இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவிய=யா காரின் விலையை அதிகரிக்க என்ன காரணம் என்று தெளிவான எதுவும் கூறவில்லை. பெரும்பாலும் வாகனங்களில் பொருத்தப்படும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பால் இந்த விலை அதிகரிப்பு என்பது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. வருமானத்தை கணக்கிட்டு சில நேரம் விலையில் மாற்றங்களை செய்வார்கள். அப்படியான விலை மாற்றங்களாக கூட இது இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 22:34 [IST]
English summary
Skoda slavia price hike may 2024 update
மேலும்... #ஸ்கோடா #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X