இவ்ளோ பாதுகாப்பான காரை வாங்கவே ஆள் இல்லயா! நொந்து போன முன்னணி நிறுவனம்... நிலைமை ரொம்ப மோசமாயிட்டு இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஸ்கோடா ஸ்லாவியா கார் 25 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 1,230 ஸ்லாவியா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 1,639 ஆக இருந்தது.

இது 25 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவில் தற்போது செடான் ரக கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இல்லை. செடான் ரக கார்களை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மட்டுமே சிறப்பாக விற்பனையாகி வருகிறது. மற்ற பெரும்பாலான கார்கள் அனைத்தும் விற்பனையில் 'டல்' அடிக்கின்றன.

Skoda Slavia

ஸ்கோடா ஸ்லாவியா காரின் வீழ்ச்சிக்கும் கூட, இதுவே காரணமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் ஆரம்ப விலை 10.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.69 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா ஸ்லாவியா காரில் மொத்தம் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.

Skoda Slavia Airbags

வசதிகளை பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் மற்றும் சப் வூஃபர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் போன்றவை ஸ்கோடா ஸ்லாவியா காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இதுதவிர இந்த காரின் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இது குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இருப்பினும் அதன் விற்பனை 'டல்' அடிப்பது ஸ்கோடா நிறுவனத்திற்கு கவலையை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா ஸ்லாவியா மிகவும் பிரீமியமான செடான் ரக கார்களில் ஒன்றாகும். எனினும் செடான் ரக கார்களை காட்டிலும், எஸ்யூவி ரக கார்களை வாங்குவதையே இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே ஸ்கோடா ஸ்லாவியா கார் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 20:47 [IST]
English summary
Skoda slavia sales report june 2024 25 per cent degrowth
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+