எதுத்தாப்ல எமனே வந்தாலும் என்ன சேதின்னு கேக்கும்... ஆனா யாருமே வாங்க மாட்டேங்கறாங்க... ஓ இதுதான் காரணமா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது செடான் ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் தற்போது செடான் ரக கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு ஸ்கோடா ஸ்லாவியா காரும் விதிவிலக்கு அல்ல. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை உறுதி செய்துள்ளது. ஆம், ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 1,695 ஸ்லாவியா கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 1,538 ஆக குறைந்துள்ளது. இது 9 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Skoda Slavia

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரின் ஆரம்ப விலை 10.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஸ்கோடா ஸ்லாவியா காரில் மொத்தம் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், 1.0 லிட்டர் இன்ஜினின் பவர் அவுட்புட் 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் ஆக உள்ளது.

Skoda Slavia Rear Profile

அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜினின் பவர் அவுட்புட் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் ஆக இருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் போன்றவை ஸ்கோடா ஸ்லாவியா காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை, மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகள் ஆகும். இந்த கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது செடான் ரக கார்களை காட்டிலும், எஸ்யூவி ரக கார்களை வாங்குவதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே ஸ்கோடா ஸ்லாவியாவை போல், மற்ற பெரும்பாலான செடான் ரக கார்களின் விற்பனையும் 'டல்' அடித்து கொண்டுதான் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 30, 2024, 23:41 [IST]
English summary
Skoda slavia sedan sales report may 2024
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+