500 பேருக்கு மேல ஒருத்தரால கூட இந்த காரை வாங்க முடியாது.. எக்ஸ்ட்ரா பணத்தை கொட்டினாலும் அவங்க தரமாட்டாங்க!
ஸ்கோடா (Skoda) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஸ்லேவியா (Slavia)-வில் புதிதாக சிறப்பு பதிப்பு (Special Edition) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை மிகவும் குறைவான யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஸ்கோடா தெரிவித்து இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பின் சிறப்புகள் என்ன? விலை எவ்வளவு? மற்றும் எத்தனை யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஸ்கோடா (Skoda) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஸ்லேவியா (Slavia)-வும் ஒன்று. இது ஓர் செடான் ரக கார் மாடல் ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த கார் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்தது.

அது ஒரு லட்சம் யூனிட் விற்பனை எனும் இமாலய சாதனையையே இந்தியாவில் படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்தே, தற்போது ஸ்லேவியாவில் சிறப்பு பதிப்பை ஸ்கோடா விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்லேவியாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இதனை ஸ்கோடா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
மேலும், 500 யூனிட்டுகளை மட்டுமே அந்த சிறப்பு பதிப்பை விற்பனைச் செய்ய இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. சிறப்பானது ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் எடிசன் (Skoda Slavia Style Editon) எனும் பெயரிலேயே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 19.13 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

வழக்கமான மாடலைக் காட்டிலும் ரூ. 30 ஆயிரம் அதிக விலையில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இருக்கின்றது. குறிப்பாக, அதிக அலங்காரங்களை அது தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், காரின் பி பிள்ளர் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, இதே கருப்பு நிறம் கொண்ட கவரே ரியர் வியூவ் கண்ணாடி மற்றும் ரூஃப் ரெயில்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஸ்லேவியா பிராண்ட் ஸ்கஃப் பிளேட்டுகள், சிறப்பு பதிப்பு பேட்ஜ் கொண்ட ஸ்டியரிங் வீல், டூயல் டேஷ்கேம் மற்றும் படில் லேம்ப் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஸ்கோடா ஸ்லேவியாவின் உயர்நிலை தேர்விலேயே சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பெக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. நிறத்தைப் பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படும். கேன்டி ஒயிட், பிரில்லியன்ட் சில்வர் அல்லது டொர்னடோ ரெட் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றன. இந்த நிறங்களுடனேயே இரண்டாவது நிறமாக கருப்பு நிறம் பயன்டுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஸ்டாண்டர்டாக கண்ணாடி கவர், பிள்ளர் மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவற்றில் நம்மால் பார்க்க முடியும். இத்துடன் சிறப்பம்சங்களாக இந்த சிறப்பு பதிப்பில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆறு ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கைகள் போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர ஸ்கோடா ஸ்லேவியா ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த கார் பாதுகாப்பு விஷயத்திலும் செம்ம கெட்டிக்காரனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஸ்லேவியா இருக்கின்றது. இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதிக வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே அதில் தற்போது சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








