மாருதி மார்க்கெட்டை வேரோடு பிடுங்கி வீச போகும் காரின் விலை இவ்ளோதானா! டாடா, ஹூண்டாய்க்கும் அடி விழ போகுது!
இந்திய சந்தையில் ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் கூட்டமே இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb) உள்ளிட்ட கார்களை எல்லாம் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு புத்தம் புதிய கார் ஒன்று வெகு விரைவில் ஸ்கோடா நிறுவன கார்களின் பட்டியலில் இணைய உள்ளது.
இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வரும் 2025ம் ஆண்டின் முதல் பாதியில், அதாவது 2025ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன்னதாக ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு சில மாதங்களாகவே இந்த காரை இந்திய சாலைகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது.
இந்த சூழலில் இந்த கார் தற்போது கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிலைக்கு ஏற்ற மாடலை, சோதனை செய்யும் பணிகளை ஸ்கோடா நிறுவனம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய காரில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைன் கொடுக்கப்படலாம்.

அத்துடன் எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் அகலமான ஏர் டேம் ஆகிய அம்சங்களும் வழங்கப்படலாம். மேலும் முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், பின் பகுதியின் மேலே, அதாவது விண்டுஷீல்டுக்கு மேலாக ஸ்டாம் லேம்ப் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். இந்த ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் கொடுக்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்திய சந்தையில் மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுடன், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய கார் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்த காரின் சேல்ஸ் ரிப்போர்ட்டில் நம்மால் மிகப்பெரிய எண்களை காண முடியும்.


Click it and Unblock the Notifications








