தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க! இவ்ளோ கம்மியான விலையில் ஸ்கோடா காரா! மாருதி, டாடா சோலிய முடிக்க போகுது!
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub 4m Compact SUV) கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
இந்த கார்களுக்கு போட்டியாக புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதை ஸ்கோடா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மிட்-சைஸ் எஸ்யூவி காரின் மினி வெர்ஷனாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கோடா குஷாக் கார் கட்டமைக்கப்பட்டுள்ள அதே MQB A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரும் கட்டமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்கோடா குஷாக் காரை காட்டிலும் இதன் நீளம் சற்று குறைவாக இருக்கும்.
நீளம் குறைக்கப்படுவதால், அனேகமாக முன் பகுதி பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ஸ்கோடா குஷாக் காருடன் ஒப்பிடும்போது, இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் வீல்பேஸ் நீளமும் குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பாடி பேனல்களும் எளிமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உற்பத்தி செலவை குறைத்து, ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்கோடா நிறுவனம் இந்த நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சமாக 115 ஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இதுதவிர வேறு ஏதேனும் ஒரு இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா குஷாக் காருடன் ஒப்பிடும்போது, அளவு மற்றும் எடை ஆகியவற்றில் குறைவு என்பதால், இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் மைலேஜ் (Mileage) சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த கார், தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என தெரிகிறது.
ஒரு வருடத்திற்கு 1 லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என ஸ்கோடா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே குறைவான விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப விலை 11.89 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.49 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ஸ்கோடா நிறுவனம் களமிறக்கவுள்ள புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை வெறும் 8.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார், வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்னும் ஒரு வருட காலத்திற்குள் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.
ஸ்கோடா க்விக் (Skoda Kwiq), ஸ்கோடா கைமக் (Skoda Kymaq), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ஸ்கோடா காரிக் (Skoda Kariq) மற்றும் ஸ்கோடா கைரோக் (Skoda Kyroq) ஆகிய பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரில், இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








