தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க! ஸ்கோடா களமிறக்கும் புது காரின் விலை இவ்ளோதானா! நடுக்கத்தில் டாடா, மாருதி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா (Skoda). பிரீமியமான கார்களை விற்பனை செய்து வருவதன் காரணமாகவே, ஸ்கோடா பிரபலமாக திகழ்கிறது. குறிப்பாக ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் (Kushaq), வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாக உள்ளது.

இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார் ஆகும். இதன் அடிப்படையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-four Metre Compact SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஸ்கோடா குஷாக் காரின் மினி வெர்ஷனாக இருக்கும்.

Skoda Kushaq

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த புதிய கார் வரவுள்ளது.

இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் ஒரு சுமார் 1 ஆண்டு காலம் மட்டுமே உள்ள நிலையில், இந்த புதிய காரை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Skoda Sub-four Metre Compact SUV

இது இந்த காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரின் வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஸ்கோடா நிறுவனத்தின் மற்ற கார்களை போல், இந்த காரிலும் அதிநவீன வசதிகளுக்கு பஞ்சமிருக்காது என நாம் நம்பலாம்.

இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், நிறைய ஏர்பேக்குகள் போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப விலை 11.89 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் புதிதாக வரவிருப்பது, ஸ்கோடா குஷாக் காரின் மினி வெர்ஷன் என்பதால், விலை குறைவாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

அனேகமாக ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். எனவே குஷாக்கை காட்டிலும் குறைவான விலையில் ஒரு ஸ்கோடா காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 13:13 [IST]
English summary
Skoda sub four metre compact suv testing commenced in india expected price
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+