இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

ஸ்கோடா நிறுவனம் மீண்டும் தனது சூப்பர்ப் காரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் செடான் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கார் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது? இதன் விலை என்ன? இதற்கு முன்னர் விற்பனையான காருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

ஸ்கோடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனை செய்து வந்த சூப்பர்ப் என்ற காரை முற்றிலுமாக விற்பனையிலிருந்து நிறுத்தியது. அப்போது அந்நிறுவனம் அந்த காரை அவுரங்காபாத் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில் முற்றிலுமாக உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது.

skoda superb relaunch

இந்த காரின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் அந்நிறுவனம் இந்த காரை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்த ஸ்கோடா சூப்பர்ப் கார் பி8 என்ற தலைமுறையை ஃபேஸ்லிஃப்ட் செய்து வெளியிட்டது. இந்த மார்ச் மாத துவக்கத்தில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. விற்பனைக்கு அறிமுகமான நிலையில் இந்த காரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஸ்கோடாவின் சூப்பர்ப் காருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றும் அந்த காரை வாங்க முடியாமல் பலர் தவிர்த்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் மீண்டும் இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் ஓரளவுக்கு விற்பனை இருக்கும் என்று கருத்தில் மீண்டும் இந்தியாவிற்கு இந்த காரை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த முறையில் சற்று வித்தியாசமாக இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

skoda superb relaunch

முன்பு உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் வைத்தே அசெம்பிள் செய்து விற்பனைக்கு இந்த காரை கொண்டு வந்த நிலையில் தற்போது முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து இதை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கார் ரூபாய் 55 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்கு கிடைத்த தகவலின் படி ஸ்கோடா நிறுவனம் வெறும் 100 கார்களை மட்டுமே இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து அதை மட்டுமே இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது உள்ளது. அதுவும் குறிப்பாக எல்&கே எனப்படும் டாப் வேரியன்ட் மாடலை மட்டுமே இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த கார் ஏப்ரல் 3ம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச மார்க்கெட்டில் உள்ள இந்த ஸ்கோடா சூப்பர் காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் டிஎஸ்ஐ டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இதுபோக 2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மற்றும் டிடிஐ டீசல் இன்ஜின் ஆப்ஷன் ஆகிய மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

இதில் இந்தியாவிற்கு இந்த கார் இறக்குமதி செய்யப்படும்போது. 2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்ஷன் கொண்ட கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட வாய்ப்புகள் குறைவுதான். இந்தியாவில் ஹைபிரிட் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் சில சிக்கல் இருப்பதால் இதை இந்நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முன்வரவில்லை.

இதில் 2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 188 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே 2 லிட்டர் டீசல் இன்ஜினை பொருத்தவரை 148 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜினும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் எல்&கே வேரியன்டை பொறுத்தவரை சூப்பர் காரின் உட்புறம் 13 இன்ச் இன்போடெயின்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இது வொயர்ட் ஸ்மார்ட் லிங்க்காக இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக 10.25 இன்ச் விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 12 வழிகளில் எலெக்ட்ரானிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் சீட்டில் மசாஜ் அம்சம் இடம் பெற்றுள்ளது.

இதுபோக காரில் வயர்லெஸ் சார்ஜிங் 11 ஸ்பீக்கர் உடன் கூடிய கான்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 3 ஸோன் கொண்ட ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த கார் ஏப்ரல் 3ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனையாகும்போதுதான் இதன் அதிகாரப்பூர்வமான விலை வெளியே தெரியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர் கார் இந்தியர்களின் மனதில் இடம் பிடித்த காராக இருக்கிறது. இந்த காரை வாங்க ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் கனவை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 14:15 [IST]
English summary
Skoda superb relaunch india april 3 full details
மேலும்... #Skoda Superb 2024 #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+