நல்லா சேல்ஸ் ஆகும்னு கொண்டு வந்தாங்க! ஆனா 1 கார் மட்டும் தான் சேல்ஸ் ஆகியிருக்குது! என்ன கார் தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது சொகுசு செடான் காரான சூப்பர்ப் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியாவில் ஏற்கனவே நல்ல மவுசு பெறுவதால் மீண்டும் இந்த காலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கார் விற்பனையாகவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக மாறிவிட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் சூப்பர்ப் என்ற சொகுசு செடான் காரை விற்பனை செய்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த காரின் பெயர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டதால் பலர் இந்த காரை வாங்க விரும்பினார்கள். ஷோரூம் இந்த காரை கேட்டு பலர் விசாரணை செய்தார்கள்.

skoda superb sales june 2024

இந்நிலையில் ஸ்கோடா நிறுவனம் இந்த காரை முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்ட காராக மீண்டும் இந்திய மார்க்கெட் கொண்டுவர முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் இந்த காரை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்புடன் நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்தது போல் முதல் இரண்டு மாதங்கள் சிறப்பாக விற்பனையானது.

ஆனால் கடைசி இரண்டு மாதங்கள் இந்த காரின் விற்பனை மிக மோசமாக மாறிவிட்டது. கடந்த மே மாதம் வெறும் நான்கு வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த காரை வாங்கி உள்ளார்கள். அதைவிட மோசமாக கடந்த ஜூன் மாதம் வெறும் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இந்த காரை வாங்கி உள்ளார். ஒரு காலத்தில் புகழ்பெற்ற கார் தற்போது மிக குறைவாக விற்பனையாவதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான்.

skoda superb sales june 2024

தற்போது முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இந்த கார் விற்பனைக்கு வருவதால், இந்த கார் ரூபாய் 54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது அந்நிறுவனத்தில் மிக குறைவாக குறைவான எண்ணிக்கையில் விற்பனையாக உள்ள கார் என்றால் இதுதான். ஸ்கோடா நிறுவனம் தற்போது கோடியாக், குஷாக்ல ஸ்லாவியா ஆகிய கார்களுடன் சூப்பர்ப் என்ற காரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இதன் முன்பக்கம் ரேடியேட்டர் கிரில் குரோம் சுற்றுப்புற வடிவமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன் பக்கம் பம்பரில் கீழ்ப்பக்கம் லோயர் ஏர் டேம் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ஃபாக் லைட் பார்க்கலாம் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பக்கவாட்டில் 18 இன்ச் கொண்ட டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. பழைய காரில் இருந்து வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

skoda superb sales june 2024

இந்த காரின் இன்ஜினை பொறுத்த வரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 187 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் குறித்த தகவல்களை இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த காரின் உட்பகுதியில் 9 இன்ச் கொண்ட சிஸ்டம் மொபைல் கனெக்டிவிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன் பக்க சீட்டுகள் பவர் மற்றும் வெண்டிலேட்டட் அம்சங்கள் கொண்டதாகவும் மசாஜ் அம்சம் கொண்டதாக டிரைவர் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காருக்குள் மூன்று ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷனும் இருக்கிறது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஏபிஎஸ், ஹில் பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் 9 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இவ்வளவு சூப்பரான கார் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக மட்டுமே விற்பனை குறைவாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் கார் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கார் தான் இருந்தாலும், இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் இந்த காரை பலர் வாங்க தயங்கி வருகிறார்கள். இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு இந்த காரின் வடிவமைப்பு மிக முக்கியமான காரணமாக இருந்தது. அதன் காரணமாகவே சிலர் இந்த காரை வாங்கி உள்ளார்கள். இதுவரை 33 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2024, 14:14 [IST]
English summary
Skoda superb sales june 2024 only 1 unit sold
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X