குச்சி மிட்டாய், குருவி ரொட்டி கணக்கா உற்பத்தி பண்ணி தள்றாங்க! இத்தன நாட்டுக்கு இங்க இருந்துதான் கார் போகுதா!
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹான் பகுதியில், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமத்தின் (Skoda Auto Volkswagen India Group) தொழிற்சாலை கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்து, புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் தற்போது கடந்துள்ளது.
ஸ்கோடா ஃபேபியா (Skoda Fabia), ஸ்கோடா ரேபிட் (Skoda Rapid), ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்ட்டோ (Volkswagen Vento) என ஏராளமான கார்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்களும், இங்குதான் உற்பத்தியாகின்றன. ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்கள்தான், MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கார்கள் ஆகும்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்துள்ள 15 லட்சம் கார்களில், இந்த MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கார்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அத்துடன் இந்த 15 லட்சம் கார்களில், 30 சதவீத கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.
இந்தியாவில் இருந்து சுமார் 40 நாடுகளுக்கு, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்த குழுமத்தின் 4வது மிகப்பெரிய ஏற்றுமதி மையமாக இந்தியா மாறியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் தற்போது சந்தையில் புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவை, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் கடுமையான போட்டி நிலவி கொண்டுள்ள செக்மெண்ட்களில் ஒன்று. ஏனெனில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்கள், இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவைதான்.
இதுதவிர மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களும் கூட, இதே செக்மெண்ட்டை சேர்ந்தவைதான். மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகியவை செடான் ரகத்தை சேர்ந்தவை ஆகும்.
இந்திய சந்தையில் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) ஆகிய செடான் கார்கள், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகியவற்றின் மிக முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 15 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் எட்டியதில், அதன் MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கார்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications








