இந்த காருக்கு இவ்வளவு வரியா? வெளிநாடுகளை பாருங்கன்னு மத்திய அரசுக்கு அறிவுறுத்தும் ஸ்கேடா!
ஸ்கோடா ஸ்போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டியால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஸ்கோடா ஃபோர்க்ஸ்வேகன் நிறுவனம் இணைந்து இந்தியாவில் வாகன தயாரிப்பு ஆலையை கட்டமைத்து அங்கு ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் தனியாகவும், ஸ்கோடா பிராண்டில் தனியாகவும் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்ற கணிப்பு தற்போது எழுந்துள்ளதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திருப்பி உள்ளனர். வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகப்படுத்த பல நிறுவனங்கள் துவங்கி விட்டன.
இந்த வரிசையில் ஸ்கோடா ஃபோக்ஸ்வேன் நிறுவனமும் இந்தியாவில் தனது தயாரிப்புத் திறனை அதிகப்படுத்த ரூபாய் 8000 கோடியை முதலீடாக கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்தால் இப்படியான விற்பனை பெறும் என்ற ஆய்வு செய்தபோது இந்நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகமாக இருக்கும் என தெரிய வந்தது.

இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் தயாராகும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் கூறும் போது: " இந்தியாவில் உள்ள வரி விதிப்பு முறை அதிக பண மதிப்பில் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ரூபாய் 60 லட்சத்திற்கு மேல் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி குறைவாக தான் இருக்கிறது. ஆனால் குறைந்த விலையில் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி அதிகமாக இருக்கிறது.

ரூபாய் 60 லட்சத்திற்கு மேல் பணம் செலவு செய்து வாகனம் வாங்கும் நிலையில் உள்ள மனிதர்களுக்கு ஏன் இப்படியான சாதகமான சூழ்நிலை இருக்க வேண்டும் அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை அதிகம் செய்துவிட்டு குறைந்த விலையில் உள்ள வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு சாதகமாக இருக்கும் படி ஜிஎஸ்டி வரியை குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்." என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்: " உலகில் பல்வேறு நாடுகளில் இந்த சூழ்நிலை வந்துவிட்டது. ஐரோப்பா,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் பெரிய ரக வாகனங்களுக்கான வரி அதிகமாக இருக்கிறது. இதையே இந்தியாவிலும் கொண்டு வரலாம். இப்படி கொண்டு வந்தால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது அதிகரிக்கும்.
ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு குறைவான வரியை வசூலித்தாலே அதிகம் நபர்கள் எலெக்ட்ரிக் வாகனம் நோக்கி நகர்வார்கள். குறிப்பாக சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரியை குறைக்க வேண்டும்" என்று கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா போக்ஸ்வேகன் நிறுவனம் சொல்வது போல் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பட்சத்தில் வாகனங்களின் விலையில் கணிசமான அளவு குறைவு ஏற்படும். இதனால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வசதியாக இருக்கும். இந்தியாவில் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்ற உடன் இது குறித்து பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









