ரூ5 லட்சம் கொடுத்தா கூட கார் வாங்க முடியாது! இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?

முதன் முறையாக கார் வாங்கும் நபர் குறைந்த விலையில் தனது பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறிய கார் ஒன்றை வாங்க வேண்டும் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான ஆப்ஷன்கள் இருந்தன. ஆனால் இன்று அப்படி அல்ல. குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை என்பது மார்க்கெட்டில் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு யார் காரணம் இதற்கு பின்னால் உள்ள வணிகம் என்ன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு குடும்பம் தற்போது தான் தனது தலைமுறையை வளர்த்து அடுத்த கட்ட படிநிலைக்கு வரும்போது தங்களுக்கு என சொந்தமாக ஒரு கார் இருந்தால் சமூகத்தில் தங்களுக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒரு காரை வாங்க யோசிக்கும் போது குறைந்த விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகும் காரை தான் வாங்க நினைப்பார்கள். அவர்களிடம் காருக்கு செலவு செய்ய போதுமான பட்ஜெட் இருக்காது.

small cars disappearing in india

இதனால் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக குறைந்த விலை கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைந்த விலை கார்களில் ஏராளமான ஆப்ஷன்கள் இருந்தன. மக்கள் அவர்களுக்கு பிடித்தமான குறைந்த விலை கார்களை தேர்வு செய்யும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் இன்றைய மார்க்கெட் அப்படி இல்லை. இன்று குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

தற்போது குறைந்த விலை கார் என்றால் மார்க்கெட்டில் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ கே1 காரை தான் சொல்ல முடியும். இந்த கார் மட்டும் தான் அதன் பேஸ் வேரியண்ட் ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. மற்ற எந்த நிறுவனத்தின் காரை நீங்கள் தேர்வு செய்தாலும் ரூபாய் 5 லட்சத்திற்கு குறைவான விலையில் கார்களை கிடையாது.

small cars disappearing in india

இதனால் நீங்கள் என்ட்ரி லெவலில் உள்ள காரை வாங்க வேண்டும் என்றால் அதுவும் குறைந்த பட்ஜெட்டில் வாங்க மாருதி ஆல்டோ கே10 காரை தவிர வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி அல்ல இந்தியாவில் பெரும்பாலான கார் விற்பனையில் இந்த குறைந்த விலை கார்கள் தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த குறைந்த விலை கார்களின் விற்பனையும் வெகுவாக சரிந்து விட்டது.

மாருதி நிறுவனத்தில் குறைந்த பட்ஜெட் விலையின் காரின் விற்பனை என்பது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 33 சதவீதமாக இருந்தது தற்போது அது 0.4 சதவீதமாக குறைந்து விட்டது. ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 33.5 சதவீதமாக இருந்தது.

small cars disappearing in india

பின்னர் 2016-17ஆம் நிதியாண்டில் இது 32.3%ஆக குறைந்தது. அடுத்து 2017-18ஆம் நிதி ஆண்டில் 28.6%மாக மீண்டும் குறைந்தது. 2018-19ல் அது 28.6% தான் இருந்தது. 2019-20 20.5 சதவீதமாக குறைந்தது. 2020-21 ஆம் நிதியாண்டில் இது 16 சதவீதமாக மீண்டும் குறைந்தது. 2021-22ம் நிதியாண்டில் 10.3 சதவீதமாக குறைந்து. 2022-23ம் நிதியாண்டில் 5.1 சதவீதமாக குறைந்தது. தற்போது 2023-24 பெரும் 0.4 சதவீதமாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை சரிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக பணவீக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அரசு சட்ட விதிமுறைகள் ஆகியவை முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த மூன்று காரணிகளால் காரின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 4 லட்சத்திற்கு விற்பனையான காரின் விலை தற்போது ரூபாய் 6 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மூன்று முக்கியமான காரணமாக இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களின் விலை 67% வரை அதிகரித்துள்ளது. பிரிமியம் ஹேட்ச் பேக் கார்களின் விலை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த ஹேட்ச்பேக் செக்மென்டை 37 சதவீத விலை உயர்வை சந்தித்துள்ளது. கார்களின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்யூவி கார்களின் விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது இந்த அதிக விலை உயர்வுக்கு காரணம் என்ன

இந்த அதிக விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் காரை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வுகள் முக்கியமான காரணம். ஒரு காரின் விலை என்பது 70 -77% வரை அதன் மூலப்பொருட்களின் செலவுகளிலேயே அடங்கி விடுகிறது. அதாவது கார் தயாரிக்க பயன்படும் ஸ்டீல், காப்பர், அலுமினியம், பிளாட்டினம், லெட் உள்ளிட்ட பல்வேறு விதமான மூலப்பொருட்களின் விலை உயர்வு நேரடியாக காரின் விலை அதிகரிக்க முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

அடுத்து சட்ட விதிமுறைகள் மத்திய அரசு தற்போது மாசு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டுகளுக்கு தகுந்தாற்போல் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்றால் அதன் விலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக காரின் விலை நேரடியாக அதிகரிக்கிறது. இதுவும் கார் விலை அதிகரிக்க மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

அடுத்ததாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு தற்போது பெரிய பெரிய கார்கள் பிரீமியம் செக்மென்ட் கார்களில் உள்ள அம்சங்களை எல்லாம் பார்த்து குறிப்பிட்ட இந்த அம்சங்கள் இருக்கும் காரை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வாடிக்கையாளருக்கு வருகிறது.ஆனால் அவர்களிடம் அந்த காரை வாங்கும் அளவுக்கு போதிய பட்ஜெட் இல்லை.

அந்த அம்சங்களை எல்லாம் தங்கள் கார்களில் பொருத்தி குறைந்த பட்ஜெட்டிலேயே அந்த அம்சம் நிறைந்த காரைக் கொண்டு வர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்குகின்றன. இப்படியான கூடுதல் அம்சங்களை ஏற்கனவே இருக்கும் காரல் சேர்க்கும் போது அந்த காரின் விலை உயர்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது என்ட்ரி லெவல் கார்களுக்கு மதிப்பு கொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் மனநிலை மாறி வருகிறது. எஸ்யூவி ரக கார் மீது மோகம் கொண்டுள்ளதால் அந்த ரக கார்களை அதிகமாக விற்பனையாகி. முன்பு கார் வாங்கும் போது அதன் விலை பிரதானமான விஷயமாக கருதப்பட்டது. தற்போது அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தரம் தான் மிக பிரதானமான விஷயமாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 9, 2024, 11:50 [IST]
English summary
Small cars disappearing in india under 5 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X