தீபாவளிக்கு புதுசா கார் வாங்கலாம்னு இருக்கீங்களா?.. 5 தரமான ஸ்பெஷல் எடிசன்கள் கிடைக்குது! இதுல ஒன்ன வாங்கலாம்!

இந்த தீபாவளிக்கு புதுசா காரை வாங்கலாம்னு பிளான் போட்டு இருக்கீங்களா?.. சந்தையில் வழக்கமான காலகட்டத்தில் கிடைப்பதைவிட சற்று அதிக கவர்ச்சியான தோற்றத்தில் சில கார் மாடல்கள் விற்பனக்குக் கிடைக்கின்றன. சிறப்பு பதிப்பகளாகவே அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் சிறந்த படைப்புகளை கூடுதல் சிறந்ததாக மாற்றி, அதாவது, சிறப்புகளாக தயார் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே கார் உற்பத்தியாளர்கள் இந்த ஸ்பெஷல் எடிசன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர்.

அவற்றில் டாப் ஐந்து தரமான சிறப்பு பதிப்பு கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அந்த கார் மாடல்களின் விலை, சிறப்புகள் மற்றும் பிற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி பலினோ ரீகல் எடிசன் (Maruti Suzuki Baleno Regal Edition): மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக பலினோ இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இதையே இன்னும் மிகுந்த சிறப்புமிக்க வாகனமாக இந்த விழாக் காலத்தை முன்னிட்டு மாருதி சுஸுகி தற்போது செய்திருக்கின்றது.

இந்த பதிப்பை அழகுமிக்க வாகனமாக காண்பிக்க கிரில் உள்ளிட்டவற்றை மெருகேற்றியிருக்கின்றனர். தொடர்ந்து, முன் மற்றும் பின் பக்க அண்டர் பாடி ஸ்பாய்ளர், அழகு கூட்டப்பட்ட பனி மின் விளக்கு, பின் பக்க கதவு, டோர் விஷர்கள் மற்றும் பாடி சைடு மோல்டிங் ஆகியவற்றையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, தனித்துவமான இருக்கை கவர், இன்டீரியர் ஸ்டைலிங் கிட், விண்டோ கர்டைன் மற்றும் அனைத்து கால நிலைக்குமான 3டி தரை விரிப்பான்களையும் இந்த சிறப்பு பதிப்பு கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த சிறப்பு அம்சங்களை வேரியண்டைப் பொருத்து 45,820 ரூபாய் முதல் 60,199 ரூபாய் வரையிலான கூடுதல் விலையிலேயே மாருதி சுஸுகி வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் பலினோ ரூ. 6.66 லட்சம் தொடங்கி ரூ. 9.84 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பிளிஸ் எடிசன் (Maruti Suzuki Swift Blitz Edition): மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய ஸ்விஃப்ட் கார் மாடலிவும் சிறப்பு பதிப்பை இந்த விழாக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பிளிட்ஸ் பதிப்பு எல்எக்ஸ்ஐ (LXI), விஎக்ஸ்ஐ (VXI), விஎக்ஸ்ஐ ஏஎம்டி (VXI AMT ), விஎக்ஸ்ஐ (ஓ) (VXI(O)) மற்றும் விஎக்ஸ்ஐ (ஓ) ஏஎம்டி (VXI(O) AMT) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 39,500 தொடங்கி ரூ. 49,848 மதிப்புள்ள அலங்காரப் பொருட்களை இலவசமாக இந்த பதிப்பில் வழங்க இருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி, இவற்றுடன், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, சிறப்பு பலினோவை போலவே ஸ்விஃப்ட் பிளிஸ் கார் மாடலும் கூடுதல் சிறப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அந்தவகையில், பின் பக்கத்தில் அன்டர்-பாடி ஸ்பாய்ளர் மற்றும் பின்பக்கத்தின் பூட் பக்கத்திற்கு மேல் பகுதியில் ஸ்பாய்ளர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, எல்இடி பனி மின் விளக்கு, கிரில் கார்னிஷ், ஒளிரும் திறன் கொண்ட டோர் சில்கள், டோர் விஷர்கள் மற்றும் காரின் இரண்டு பக்கத்தில் மோல்டிங்குகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டொயோட்டா கிளான்ஸா பெஸ்டிவ் எடிசன் (Toyota Glanza Festive Edition): மாருதி சுஸுகி நிறுவனத்தைப் போலவே இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பதிப்பை விற்பனைக்கு வழங்கும் மற்றுமொரு நிறுவனமாக டொயோட்டா இருக்கின்றது. இந்த நிறுவனம் கிளான்ஸா ஃபெஸ்டிவ் எடிசன் எனும் பதிப்பை முதலில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த சிறப்பு பதிப்பு ரூ. 20,567 மதிப்புள்ள டொயோட்டாவின் ஜென்யூன் அக்சஸரீஸ்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த சிறப்பு பதிப்பானது வருகின்ற 31 அக்டோபர் மாதம் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. விழாக் கால பதிப்பு என்பதாலேயே இதன் விற்பனைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

குரோம் பூச்சுக் கொண்ட பின் பக்கல் பம்பர், ஃபெண்டர், பின் பக்கத்தில் ரெஃப்ளக்டர் மற்றும் வரவேற்கும் டோர் லேம்ப், குரோம மற்றும் கருப்பு நிறத்தாலான சைடு மோல்டிங்குகள் ஆகியவற்றையே இந்த சிறப்பு பதிப்பு தாங்கியிருக்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு இந்த பதிப்பில் பெற்றுக் கொள்ள முடியும்.

டொயோட்டா ரூமியன் ஃபெஸ்டிவ் எடிசன் (Toyota Rumion Festive Edition): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் தரமான சிறப்பு பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதுவும் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பதிப்பிலும் ரூ. 20,608 மதிப்புள்ள ஜென்யூன் அக்சஸரீஸ்களை டொயோட்டா வழங்கும்.

அதாவது, கிளான்ஸாவில் வழங்கப்பட்டதைப் போலவே தனித்துவமான அணிகலன்களை இதில் வழங்கி இருக்கின்றது. பேக் டோர் கார்னிஷ், மட் ஃப்ளாப், ரியர் பம்பர் கார்னிஷ் மற்றும் டீலக்ஸ் கார்பெட் மேட், ஹெட்லேம்ப் கார்னிஷ் உள்ளிட்டவற்றையே அது வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த சிறப்பு பதிப்பில் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு டொயோட்டா வழங்கி இருக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ பாஸ் எடிசன் (Mahindra Scorpio Boss Edition): மஹிந்திரா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஸ்கார்பியோ இருக்கின்றது. இதிலேயே மஹிந்திரா நிறுவனம் தற்போது சிறப்பு பதிப்பாக பாஸ் எனும் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான ஸ்கார்பியோவைக் காட்டிலும் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் பதிப்பாகக் காட்சியளிக்கின்றது.

மேலும், இந்த அலங்கரிப்பால் பெயருக்கேற்ப இந்த பதிப்பு ஓர் தலைவனைபோல காட்சியளிக்கவும் செய்கின்றது. குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்களை பாஸ் பதிப்பில் அதிகளவில் பார்க்க முடிகின்றது. கிரில், ஹெட்லைட், டெயில் லைட், பனி மின் விளக்கு மற்றும் டோர் ஹேண்டில் ஆகியவற்றிலேயே குரோமால் அலங்கரிக்கப்பட்ட அம்சங்களை அதிகளவில் பார்க்க முடிகின்றது.

தொடர்ந்து, காரின் முன் பக்கத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பம்பர் எக்ஸ்டென்டர், கார்பன் ஃபைரால் ஆன ஓஆர்விஎம், கருப்பு நிற ரியர் பம்பர், டோர் விஷர்கள் உள்ளிட்டவற்றையும் ஸ்கார்பியோ பாஸ் எடிசன் பெற்றிருக்கின்றது. வெளிப்பக்கத்தைப் போலவே இந்த பதிப்பின் உட்பக்கமும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், கருப்பு மற்றும் பீஜ் எனும் இரண்டு நிறங்களால் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து சிறப்பு பதிப்புகளும் தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும். ஆகையால், அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். சொல்லப்போனால், இந்த மாத இறுதி வரை மட்டுமே இந்த பதிவில் உள்ள பெரும்பாலான கார் மாடல்கள் விற்பனைக்குக் கிகடைக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 22, 2024, 20:06 [IST]
English summary
Special edition car models launched for diwali 2024 swift blitz to scorpio boss edition
மேலும்... #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+