இந்த காரை வாங்கறதுக்கு முன்னாடி அம்பானியே 1,000 தடவை யோசிப்பாரு! அதான் அவ்ளோ பெரிய ஆட்களே வாயை பொளந்துட்டாங்க!

உலகம் முழுவதும் தற்போது எஸ்யூவி (SUV) ரக கார்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. எனவே ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) மற்றும் லம்போர்கினி (Lamborghini) போன்ற நிறுவனங்கள் கூட எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) ஆகிய கார்களை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவைதான் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் லம்போர்கினி ஆகிய நிறுவனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எஸ்யூவி ரக கார்கள் ஆகும்.

Sunny Deol Check Out Ferrari Purosangue

இந்த வரிசையில் தற்போது ஃபெராரி (Ferrari) நிறுவனமும் இணைந்துள்ளது. ஆம், ஃபெராரி நிறுவனமும் தனது முதல் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது. ஃபெராரி ப்ரோசாங்வே (Ferrari Purosangue) என்ற பெயரில் இந்த எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் கடந்த 2022ம் ஆண்டே ஃபெராரி ப்ரோசாங்வே கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்திய சந்தைக்கு தற்போதுதான் வந்துள்ளது. இந்த காரின் அறிமுக நிகழ்ச்சி மும்பை (Mumbai) நகரில் நடைபெற்றது. இதில், பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sunny Deol Madhuri Dixit Check Out Ferrari Purosangue

சன்னி தியோல் (Sunny Deol), மாதுரி தீக்ஸித் (Madhuri Dixit) மற்றும் ராம் கபூர் (Ram Kapoor) போன்றோர், இந்த காரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். கார் ஆர்வலர்களான இவர்கள் மூவரும், ஃபெராரி ப்ரோசாங்வே காரை ஆர்வமாக பார்வையிட்டனர்.

இந்திய சந்தையில் ஃபெராரி ப்ரோசாங்வே காரின் விலை 10.50 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மிகவும் விலை உயர்ந்த ஃபெராரி ப்ரோசாங்வே காரில் பொருத்தப்பட்டிருப்பது 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 725 பிஎஸ் பவர் மற்றும் 716 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஃபெராரி ப்ரோசாங்வே கார் தற்போதுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே தொழிலதிபர் (Businessman) ஒருவர் இந்த காரை வாங்கி விட்டார். அவர் பூபேஷ் ரெட்டி (Boopesh Reddy) ஆவார். இவர்தான் இந்தியாவில் ஃபெராரி ப்ரோசாங்வே காரின் முதல் உரிமையாளர்.

ப்ரன் கார்ப்பரேஷன் (Bren Corporation) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ள பூபேஷ் ரெட்டி சமீபத்தில்தான் இந்த காரை டெலிவரி எடுத்தார். இது குறித்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனடியாக வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 18:52 [IST]
English summary
Sunny deol madhuri dixit check out ferrari purosangue all details here
மேலும்... #ஃபெராரி #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+