மைலேஜ், 5ஸ்டார் ரேட்டிங் எல்லாம் இல்ல இந்திய மக்கள் கார்களில் இந்த விஷயத்தை தான் அதிகம் எதிர்பார்க்குறாங்க!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. நிலையில் சமீப காலமாக குறைந்த விலை கார்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இது எல்லாம் நமக்கு தெரியும். ஆனால் மிக ஆச்சரியப்படும் வகையில் ஒரு விற்பனை பேட்டர்ன் என்பது மார்க்கெட்டில் நடந்துள்ளது இது குறித்த விரிவான விபரங்களை தான் காண போகிறோம்.
இந்தியாவில் கார்களின் விற்பனை என்பது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை காரணமாக இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டாக இருக்கிறது. அமெரிக்கா சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா தான் இருக்கிறது. ஜப்பானை நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டது. இந்நிலையில் பல நிறுவனங்கள் இந்தியாவில் தனது விற்பனையை கொண்டு வர பல்வேறு முயற்சியை செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு வாகன தயாரிப்பை கொண்டு வர நினைக்கும் பல நிறுவனங்கள் இந்திய மார்க்கெட் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். அவர்கள் இந்திய மக்களுக்கு என்ன விதமான கார்கள் பிடிக்கும் அவர்களுக்கு ஏற்ற கார்களை அந்நிறுவனத்தால் தயாரிக்க முடியுமா? அந்நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கும் கார்கள் இந்திய மக்களுக்கு உகந்ததாக இருக்குமா? உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்படியாக ஜேட்டோ டைனமிக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் குறித்த ஒரு சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேவின் முடிவுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை நமக்கு கொண்டு வந்துள்ளன. நாம் எல்லோரும் இந்தியாவில் மக்களுக்கு அதிக மைலேஜ் தரும் கார்கள் அல்லது சிறந்த பாதுகாப்பு அம்சம் நிறைந்த கார்கள் தான் விருப்பமாக இருப்பதாக நினைப்போம். ஆனால் இந்த ரிப்போர்ட்டில் வேறு சில விஷயங்கள் நமக்கு கிடைக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு மொத்தம் 35,49,2013 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதில் 14,76,911 வாகனங்கள் எஸ்யூவி ரக வாகனங்களாக உள்ளன. 12,43,685 வாகனங்கள் வாகனங்களாக உள்ளன. இந்த விற்பனை எண்ணிக்கை பார்க்கும் போதே சமீப காலமாக ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை சரிவு. கடந்த 2022-ம் ஆண்டு துவங்கி விட்டது நமக்கு தெளிவாக தெரிகிறது. அதேநேரம் எஸ்யூவி கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த எஸ்யூவி கார்களில் என்னென்ன அம்சங்கள் கொண்ட கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. இதன்படி எஸ்யூவி கார்களில் ப்ரீமியமாக உள்ள டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கீ லெஸ் இக்னேஷியன், டூயல் சோன் ஏசி, ஆகிய அம்சங்கள் உள்ள கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன.

ஆனால் இதைவிட மிக முக்கியமான ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையான ஒட்டுமொத்த கார்களில் 26 சதவீதம் கார்கள் சன்ரூஃப் கொண்ட கார்களாக உள்ளன. அதாவது ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் கார்களில் 4ல் ஒரு கார்கள் சன்ரூஃப் கொண்ட கார்களாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
இந்த சன்ரூஃப் அம்சம் கொண்ட காருக்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதை அறிந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் கார்களில் கூட இந்த அம்சங்களை கொண்டு வருகின்றனர் எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெறும் மூன்று முதல் 5சதவீத கார்களின் மட்டுமே இந்த சன்ரூஃப் அம்சம் என்பதிருந்தது ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு அது 26சதவீதமாக அதிகரித்து விட்டது.
சன்ரூஃப் ஃபங்ஷன் போக நாம் ஏற்கனவே மேலே சொன்ன படி வயர்லெஸ் சார்ஜிங், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் இக்னீஷியன், டூயல் சோன் ஏசி ஆகியவை மிக முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது. இன்று காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் 85% கார்களில் இந்த சன்ரூஃப் என்ற அம்சம் இருக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சொகுசான ஒரு அம்சம் தான். இது கட்டாய தேவை என்று எதுவும் கிடையாது. இந்த அம்சத்தை பொருத்துவதால் காரின் விளையும் ரூபாய் 50,000 முதல் 80 ஆயிரம் வரை அதிகமாகிறது. இந்தியாவில் இந்த சன்று வசதியை பயன்படுத்தும் அளவுக்கு எங்கேயுமே சூழ்நிலை கிடையாது. ஆனால் மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அம்சத்தை வாகனங்களில் புகுத்துகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ15 லட்சம் மதிப்பிலான கார்களில் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் இந்த சன்ரூஃப் அம்சம் என்பது இருக்கிறது. அனைவரும் இந்த சன்ரூஃப் அம்சத்தை மிக முக்கியமான அம்சமாக பார்க்கிறார்கள். இந்த சன்ரூஃப் அம்சமில்லை என்றால் அவர்கள் அந்த காரையை விட்டுவிட்டு வேறு காருக்கு மாறும் மனநிலையில் சென்று விடுகிறார்கள். கார் வாங்கும் முடிவை எடுக்க இந்த சன்ரூஃப் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









