எவ்வளவு தேடினாலும் இந்த கார்ல சன் ரூஃப்பை கண்டுபிடிக்கவே முடியாது! ஏன் தெரியுமா?
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகவும் முழு சைஸ் எஸ்யூவி கார் என்றால் அது டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் கார் தான் இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரில் மக்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் உடன் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஃப் ரோடுகளில் கூட இந்த கார் சிறப்பாக வேலை செய்யும். இவ்வளவு அம்சங்கள் இருந்தும் இந்த காரில் மக்கள் அதிகம் விரும்பும் சன் ரூஃப் ஆப்ஷன் கிடையாது. சிறிய சிறிய கார்களில் கூட இந்த ஆப்ஷன் இருக்கும்போது பெரிய காரில் இந்த ஆப்ஷன் இல்லை என்ற விவரங்களை விரிவாக காண்போம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் பிரபலமான எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த காரில் சன் ரூஃப் ஆப்ஷன் கிடையாது. இதற்கு பின்னால் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இதற்கு அந்நிறுவனம் வடிவமைத்திருக்கும் காரின் வடிவமைப்பும் அந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் சன் ரூஃப் மிக முக்கியமான ஆப்ஷனாக பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகப் பிரபலமான ஆப்ஷனாகவும் இது இருக்கிறது. இது போன்ற ஆப்ஷன் எல்லாம் சொகுசு கார்களில் தான் இருந்தன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் கொண்ட கார்களிலும் இப்படியான ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அந்த கார்களின் விற்பனை அதிகமாகிறது. இவ்வளவு இருந்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சன்ரூஃப் ஏன் இல்லை என்ற கேள்வி இருக்கிறது.
விலை அடிப்படையிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அதிக விலை கொண்ட கார் தான். அதே நேரம் இந்த கார் அளவுகளிலும் பெரிய அளவு கொண்ட கார் தான். அப்படி இருந்தும் இந்த அம்சம் ஏன் இல்லை என்றால் அதற்கு பாதுகாப்பு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ரோடு மற்றும் கடினமான பாதைகளில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் இப்படியான கார்களில் சன்ரூஃப் வைப்பது கடினம்.

சன் ரூஃப் வைக்கப்பட வேண்டும் என்றால் காரின் மேல் பகுதியில் உள்ள கூரை பகுதியை கட் செய்ய வேண்டும் இப்படியாக கட் செய்தால் வாகனத்தின் ரூஃப் பகுதியில் உள்ள ஸ்டிரென்த் கணிசமான அளவு குறையும். மிக கடினமான கண்டிஷனில் வாகனம் பயணிக்கும் போது ரூஃப் பகுதியில் உள்ள பலம் தான் வாகனத்தை நிலைகுலைய வைக்காமல் பாதுகாக்கும்.
அந்த பலத்தை குறைத்தால் இந்த வாகனம் ஆஃப் ரோடில் செல்லும்போது வாகனத்தின் அடிப்படை வடிவமைப்பிலேயே மாற்றம் ஏற்பட்டு விட வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஆஃப் ரோடில் இந்த வாகனம் பயணம் செய்யும்போது வாகனம் கவிழ்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது. இப்படியான தருணங்களில் சென்று இருந்தால் காருக்குள்ளே இருப்பவர்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கும்.
இதுபோக இந்தியா போன்ற நாடுகளில் அதிக பகுதிகள் வெப்பம் அதிகமாக இருக்கும் இடமாக இருக்கிறது. இது போன்ற நாடுகளில் சன் ரூஃப் அம்சம் கொண்ட காருக்கான தேவையே கிடையாது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் சன் ரூஃப் அம்சம் ஒரு தேவையில்லாத விஷயம்தான். சன் ரூஃப் பயன்படுத்துவதால் காரின் ஏசி அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால் எரிபொருள் செலவு அதிகமாகும். இதுவும் ஃபார்ச்சூனர் காரில் சன்ரூஃப் இல்லாததற்கு முக்கியமான காரணம்.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரிதாக எதிர்பார்ப்பது நம்பகத்தன்மையான, பாதுகாப்பான கார் தான். இந்த வாடிக்கையாளர்கள் சன்ருஃபை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. மேலும் சன் ரூஃப் பயன்படுத்துவதால் காருக்குள் அதிகமாக தூசி ஏற வாய்ப்பு இருக்கிறது. இதனால் காரின் பராமரிப்பு சொல்லவும் அதிகமாகலாம்.
டொயோட்டா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக அதே நேரம் அவர்களது நம்பகத்தன்மைக்காக இந்த காரை தயாரிப்பதால் அதில் சன் ரூஃப் ஆப்ஷன இதுவரை அந்நிறுவனம் கொண்டு வரவில்லை. அதிக விலை கொண்ட காராக இருந்தாலும் சன் ரூஃப் ஆப்ஷன் கொண்டு வருவதால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு பிரச்சனை இருப்பதால் அந்நிறுவனம் இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபார்ச்சூனர் கார் பற்றி நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரிந்திருந்தாலும், இந்த சன் ரூஃப் குறித்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. இந்தியாவிலேயே சன் ரூஃப்கான தேவை என்பது கிடையாது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்காகவே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த சன் ருஃப் ஆப்ஷனை தங்கள் கார்களில் பொருத்தி வருகிறார்கள். நீங்கள் புதிதாக கார் வாங்கும் போது இந்த ஆப்ஷனை தவிர்ப்பது நல்லது தான்.


Click it and Unblock the Notifications








