சுஸுகி - டாடா நண்பர்கள் ஆகியாச்சா.. ரத்தன் டாடா மறஞ்சதுக்கு அப்புறம் இப்படி ஒரு வேலை நடக்குதா!
டாடா (Tata)-வும், சுஸுகி-யும் நண்பர்களாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணைவின் வாயிலாக இரு ஜாம்பவான் நிறுவனங்களும் என்ன மாதிரியான பணியை மேற்கொள்ள இருக்கின்றன என்பதே பலரின் கேள்வியாக மாறி உள்ளது. உலக நாடுகள் பலவற்றில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வரும் ஓர் நிறுவனம் சுஸுகி மோட்டார் கார்பரேஷன் (Suzuki Motor Corporation). இந்தியாவில் இந்த நிறுவனம் ஏற்கனவே மாருதி உடன் இணைந்து வாகன வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்பரேஷன், நிறுவனம் டாடாவுடன் கை கோர்த்து இருக்கின்றது. டாடா குழுமத்தின்கீழ் ஓர் அங்கமாக இயங்கி வரும் டாடா எல்க்ஸி (Tata Elxsi) உடனேயே அது இணைந்திருக்கின்றது. டிசைன் மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவில் முன்னணி பிராண்டாக இயங்கி வரும் நிறுவனமே டாடா எல்க்ஸி ஆகும்.

இத்தகைய நிறுவனத்துடனேயே சுஸுகி கை கோர்த்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது சுஸுகி - டாடா எல்க்ஸி எனும் மேம்பாட்டு மையம் (Suzuki and Tata Elxsi Launch SUZUKI-TATA ELXSI Offshore Development Center) ஒன்றை இந்தியாவின் புனே நகரத்தில் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த மையம் சுஸுகியின் எதிர்கால வாகனங்களை மேம்பட்டதாக தயாரிக்கும் விதமாக செயல்படும் என கூறப்படுகின்றது. ஆமாங்க, சுஸுகியின் வாகனங்களை தரம்மிக்கதாக மாற்றிக் கொடுக்கும் ஓர் முயற்சியிலேயே தன்னால் இயன்ற உதவிக் கரத்தை வழங்க இருக்கின்றது டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா எல்க்ஸி.
மிக முக்கியமாக சுஸுகியின் பசுமை இயக்க (சுற்றுச் சூழலுக்கு வாகன) உற்பத்தியிலேயே தன்னுடையை ஒத்துழைப்பை டாடா எல்க்ஸி வழங்க இருக்கின்றது. தொடர்ந்து, அடுத்த தலைமுறை வாகனங்களுக்கான பவர்டிரெயின் (எஞ்சின்) மற்றும் வாகனங்களுக்கான சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணியிலும் சுஸுகிக்கு டாடா எல்க்ஸி உதவ இருக்கின்றது.
உலக அளவில் புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இணைப்பு வசதிக் கொண்ட கார், தானியங்கி வசதிக் கொண்ட கார் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைக் கொண்ட மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த கூட்டணியானது மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் கூட்டணியின்கீழ் உருவாக்கப்பட்ட அட்வான்ஸ்டு அம்சங்கள் நிறைந்த வாகனங்கள் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏன் இந்த கூட்டணி பறக்கும் கார்களைகூட இந்த உலகிற்காக தயார் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நிறுவனங்களும் அவரவர்களுக்கான துறையில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே இருவரும் தங்களின் வளர்ச்சியையும், அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றனர்.
எனவே எதிர்காலத்தில் சுஸுகியின் வாகனங்கள் இன்னும் மற்ற பிராண்டுகளுக்கு அதிக சவாலை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இவர்களின் கூட்டணியின் கீழ் உருவாக்கப்படும் வாகனம் எப்போது சந்தையைக் களம் காண்பது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவிலேயே இதுகுறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சஸுகி சீக்கிரமே இவிஎக்ஸ் எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சுஸுகி நிறுவனம் தற்போது எதிர்காலத்தைக் கருத்தில் டாடா எல்க்ஸி உடன் கை கோர்த்து உள்ளது. இது நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சிக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








