34 கி.மீ மைலேஜ் தரும் இந்த கார் டேக்ஸி யூஸ்க்கு வரப்போகுதாம்! ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் இருக்குது!
34 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் சுஸூகி செலிரியோ காரின் ஸ்பெஷல் எடிசன் பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கும் இந்த கார் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் பாருங்கள்.
தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் பகுதியில் தற்போது பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ என்ற ஆட்டோமொபைல் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன. இந்திய மக்கள் விரும்புவதும் போன்ற வாகனங்களையே தாய்லாந்து மக்களும் அதிகமாக விரும்புகிறார்கள். இதனால் இந்தியாவில் விற்பனையாகி வரும் வாகனங்கள் தாய்லாந்திலும் அதிகமாக விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்தில் சுஸூகி நிறுவனம் செலிரியோ காரின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது மூன்றாம் தலைமுறை வெர்ஷன் அப்டேட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தலைமுறை செய்திகள் மாற்றப்பட்டு கொஞ்சம் மஸ்குலரான வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது.
ஆனால் தாய்லாந்து நாட்டில் விற்பனையாகி வரும் இரண்டாம் தலைமுறை காரின் வடிவமைப்பை பொறுத்தவரை கொஞ்சம் பிளேஃபுல்லாகவும், எலகென்டாகவும் இருக்கிறது. இதன் பாடி பேனல்கள் எல்லாம் கர்வியாகவும் ரவுண்டர் எட்ஜாகவும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த காரின் ஸ்பெஷல் எடிசன் வெர்ஷனை பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ கண்காட்சியில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசனை பொறுத்தவரை நீலம் மற்றும் வெள்ளை ஆகிய டூயல் டோனில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பானட், பில்லர் ரூஃப், ஓஆர்விஎம் டெயில் கேட், முன்பக்க பம்பர், சைடு ஸ்கிட் பிளேட், பின்பக்க பம்பர் ஆகிய வெள்ளை நிற ஷேடு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வீல் கவர்களும் வெள்ளை நிற ஷேடில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள டோர் ஹேண்டில்கள் மஞ்சள் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் மேலே லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் வகையில் ராக் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் லூக்கை பார்க்கும் போது இது டாக்ஸி பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் கார் போன்ற லுக்கில் இருக்கிறது. அப்படியாக டாக்ஸி பயன்பாட்டிற்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டால் சாலையில் செல்லும்போது எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் இந்த காரின் வடிவமைப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.

தாய்லாந்து நாட்டில் உள்ள டாக்ஸிகளின் வடிவமைப்பிலிருந்து இந்த கார் இன்ஸ்பயர் செய்யப்பட்டு டூயல் டோன் டிசைனில் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது. இந்த காரின் பக்கவாட்டு கதவுகளில் 'Indy 2017' மற்றும் 'Suzuki Indy Make A Difference' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் உள்ளிட்ட மற்ற எந்த விஷயங்களிலும் மாற்றங்கள் இல்லை. வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற கட்டமைப்பு ஆகியவற்றில் மட்டும்தான் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை வெளிப்புறத்தில் உள்ள அதே கலர் தீம் தான் காரின் உள்ளேயும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறம் கொண்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. நீல நிற ஆக்சென்ட் காரின் ஏசி வென்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. சீட்டுகளில் பிளாக் பைப்பிங் கொண்டு தையல் வழங்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல், கியர் பாக்ஸ் ஆகிய பகுதிகளிலும் நீல நிற ஆக்சென்ட் வழங்கப்பட்டுள்ளன.
உட்புறத்தில் இருக்கும் ஒரே மாற்றம் ஸ்பெஷல் எடிஷன் காரில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த காரில் அதைவிட பெரிதாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஹைபிரிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , சீட் ஸ்லைடு பங்க்ஷன், அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் தலைமுறை இன்ஜினை பொருத்தவரை 998சிசி கே10பி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 68பிஎஸ் பவரையும் 90என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகி வரும் மாருதி செலிரியோ காரை பொறுத்தவரை 998சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 66.62பிஎஸ் பவரையும் 89என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் செலிரியோ காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் இந்த கார் 56.70பிஎஸ் பவரையும், 82.1என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் மைலேஜை பொறுத்தவரை மேனுவல் கியரில் 26.68 கிலோமீட்டர் மைலேஜ், ஏஎம்டி கியரில் 26 கிலோ மீட்டர் மைலேஜும், இந்தியாவில் விற்பனை ஆகும் சிஎன்ஜியில் 34.43கிலோமீட்டர் மைலேஜூம் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி செலிரியோ கார் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் தாய்லாந்திலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற காராக இருக்கும் நிலையில் அங்கு நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகமாகியுள்ளது தாய்லாந்து மக்களை மட்டும் அல்லாமல் இந்திய மக்களையும் குஷிப் படுத்தி உள்ளது


Click it and Unblock the Notifications









