மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான்! பெயரையும் சொல்லிட்டாங்க.. டாடா, எம்ஜி-யை இனி காப்பாத்துவது கஷ்டம்!
ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும் விதமாக சுஸுகி (Suzuki) நிறுவனம், அதன் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. யாருமே எதிர்பார்க்காத நேரத்திலேயே இந்த காரை சுஸுகி அறிமுகம் செய்திருக்கின்றது. அனைவரும் இந்த கார் நாளையே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில், இப்போது அது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. 'இ விட்டாரா' (e Vitara) எனும் பெயரிலேயே அது வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இதுவும் யாரும் எதிர்பார்க்காத பெயரே ஆகும்.
சுஸுகி தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இவிஎக்ஸ் (eVX) எனும் பெயரிலேயே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பெயரிலேயே 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் சுஸுகி அக்காரை காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது இவிஎக்ஸ் என்கிற பெயருக்கு பதிலாக இ விட்டாரா எனும் பெயரில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பு: இந்த படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த கார் மாடலே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்தியாவில் இதே பெயரில் விற்பனைக்கு வருமா அல்லது வேறு பெயரில் அது விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. இ விட்டாரா எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவிற்கான இ விட்டாரா மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிற்காக மட்டுமல்ல ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான இ விட்டாரா-வும் இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது. இது உலக மார்க்கெட்டிற்கான கார் என்பதாலேயே தற்போது இத்தாலி-யின் மிலன்-இல் வைத்து வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த கார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பின்னரே இந்த கார் ஐரோப்பா உள்ளிட்ட பிற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமாம். ஆனால், எந்த நாளில் அறிமுகம் செய்யப்படும் என்கிற துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விரைவிலேயே இந்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி ஷோ வாயிலாக மீண்டும் ஒரு முறை இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் வெளியீடு அல்லது காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இ விட்டாராவின் இந்திய வருகையை உறுதி செய்யும் விதமாக அமையும். மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு கார் மாடலையும் தழுவி இந்த வாகனத்தை உருவாக்கவில்லை. அவர்கள் தங்களின் புதிய 'ஹார்டெக்ட் இ' (Heartect-e) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் ஸ்கேட்-போர்டு (Skateboard) பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இ விட்டாராவை தயார் செய்திருக்கின்றனர்.
இந்த காரில் பயணத்தை சுவாரஷ்யமான மாற்றுவதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை சுஸுகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 'இ-ஆக்ஸில்' (eAxles) என அழைக்கப்படும் அம்சத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
49 kWh மற்றும் 61 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் பெரிய பேட்டரி பேக்கில் டூயல் மோட்டார் அனைத்து வீல் இயக்கம் வசதி ஆப்ஷனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது எல்எஃப்பி (Lithium Iron-phosphate) வகை பிளேட் செல் (blade cell)-கள் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இது பிஒய்டி (BYD) நிறுவனத்தின் தயாரிப்பாகும். இ விட்டாரா ரேஞ்ச் தருவதிலும் மிக சிறந்த வாகனமாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அது ஓர் முழு சார்ஜில் 500 கிமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. இது 61 kWh பேட்டரி பேக்கின் ரேஞ்ச் திறன் ஆகும்.
இதன் 49 kWh பேட்டரி பேக் 350 கிமீ முதல் 400 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என நம்பப்படுகின்றது. ரேஞ்ச் தருவதில் மட்டுமில்லைங்க இந்த கார் சிறப்பம்சங்களை தாங்கி இருப்பதிலும் மிக சிறந்த ஒன்றாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இ விட்டாராவில் இரண்டு திரைகள் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாகவும் செயல்படும். இதுதவிர, ஸ்டோரேஜ்களில் யுஎஸ்பி போர்ட், இரட்டை ஸ்போக்குகள் கொண்ட ஃப்ளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் ஆகியவற்றை இ விட்டாரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸே தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டிற்கு ஏற்கனவே தலைவலியைக் கொடுக்கக் கூடிய நிறுவனமாக எம்ஜி மாறி இருக்கின்றது. இதன் வரிசையிலேயே தற்போது இ விட்டாரா வாயிலாக மாருதியும் இணைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









