ஆகஸ்டுலதான் அறிமுகமே பண்ணாங்க அதுக்குள்ள பிரச்னைனு வந்து நிக்கறாங்க.. இந்த சுஸுகி கார் இந்தியாவுல தயாரிச்சது..
இந்தியாவில் வருகின்ற ஜனவரி மாதத்தில் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2025 நடைபெற இருக்கின்றது. இதற்கு முன்னதாக இந்த நிகழ்வு சென்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் வருங்கால வாகனங்களை காட்சிப்படுத்த செயனர். ஒரு சிலர் புதுமுக வாகனங்களை விற்பனைக்கும் அறிமுகப்படுத்தினர். அந்தவகையில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் இந்த உலக புகழ் பெற்ற வாகனங்களுக்கான மேடையைப் பயன்படுத்தி தன்னுடைய தயாரிப்புகள் சிலவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
அதில் ஒன்றே ஃப்ரான்க்ஸ் (Fronx) ஆகும். இது பலினோ (Baleno) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட கிராஸோவர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் விற்பனைக்கு வந்து ரெண்டு வருஷத்திற்கும் குறைவான காலமே ஆகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஃப்ரான்க்ஸ் காரில் பிரச்னை இருக்கின்றது என வந்து நின்றிருக்கின்றது தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி.

பிரேக்கிங் (Brake) அமைப்பிலேயே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த பிரச்னையையே சரி செய்துக் கொடுக்கின்றோம் காரை திருப்பிக் கொண்டு வாங்க என்கிற அழைப்பையும் மாருதி சுஸுகி தற்போது விடுத்திருக்கின்றது. இந்த அழைப்பு இந்தியாவிற்கானது அல்லது ஜப்பானிய சந்தைக்கானது மட்டுமே ஆகும்.
அதேவேளையில், ஜப்பானில் விற்கப்படும் இந்த கார் மாடல் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுனு சொல்றீங்களே அப்போ இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரிலும் கோளாறு இருக்குமோ என நீங்கள் சந்தேகிக்கலாம்.. இப்போது வரை எந்த பிரச்னையும் இல்லை என்றே தெரிகின்றது.
ஆகையால், இதுகுறித்த எந்தவொரு அச்சமும் இந்திய ஃப்ரான்க்ஸ் உரிமையாளர்கள் அடைய தேவையில்லை. அதேவேளையில், சிக்கல் ஏதேனும் இருப்பின் சுஸுகி ஜப்பானில் மேற்கொண்டிருப்பதைப் போலவே மாருதி சுஸுகி இந்தியாவில் மறு அழைப்பு பணிகளை முன்னெடுக்கும். ஜப்பானுக்கு இந்தியாவில் இருந்து ஃப்ரான்க்ஸ் கார் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கின.
இந்தியாவைப் போலவே அங்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவியதன் விளைவாக இக்காரை ஏற்றுமதி செய்தனர். அதேபோல், நல்ல வரவேற்பையே ஃப்ரான்க்ஸ் ஜப்பானில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃப்ரான்க்ஸைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய காராக ஃப்ரான்க்ஸ் ஜப்பானில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், ஆல் வீல் டிரைவிங் வசதி மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எல்லாம் ஜப்பானுக்கான ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அக்கார் மாடலின் பிரேக்கிங் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, அதை சரி செய்துக் கொடுப்பதற்கான அழைப்பே தற்போது அந்நாட்டில் விடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட நிலையில் முழுமையாக நான்கு மாதங்கள்கூட ஆகாத நிலையில் தற்போது பிரச்னை என கூறப்பட்டு இருப்பது ஜப்பானி ஃப்ரான்க்ஸ் கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சுமார் 1,911 யூனிட்டுகளுக்கு மறு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. செப்டம்பர் 13 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கே இந்த அழைப்பு பொருந்தும். இந்தியாவில் ஃப்ரான்க்ஸ் கார் ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்தாலும், அது ஏப்ரல் 2023 முதலே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நல்ல டிமாண்டை பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாகவும் அது மாறியிருக்கின்றது. இரண்டு லட்சம் யூனிட்டுகளையும் கடந்து இந்த கார் மாடல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பை ஃப்ரான்க்ஸ் இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 7.52 லட்சம் தொடங்கி ரூ. 13.04 லட்சம் வரையிலான விலையில் அது விற்கப்படுகின்றது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். மிக முக்கியமாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஃப்ரான்க்ஸ்-ம் ஒன்றாகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும், மேலும், அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








