இந்த குட்டி காரோட விலை உண்மையாவே இவ்ளோதானா! எவ்ளோ டிராஃபிக் இருந்தாலும் பைக் மாதிரி பூந்து போயிரலாம்!
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று சுஸுகி ஹஸ்ட்லர் (Suzuki Hustler). இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாக இருந்து கொண்டுள்ளது. ஆனால் இந்திய வாடிக்கையாளர்களின் இந்த பல வருட எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை. எனினும் இந்தியர்களின் இந்த எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நிறைவேறலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தைகளில் மிகவும் பிரபலமாக உள்ள சுஸுகி ஹஸ்ட்லர் காரின் சோதனை ஓட்டம் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால், சுஸுகி ஹஸ்ட்லர் கார், கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், டாடா பன்ச் (Tata Punch) காருக்கு போட்டியாக இருக்கும்.

இந்திய சந்தையில் தற்போது மினி எஸ்யூவி (Mini SUV) ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். குறிப்பாக டாடா பன்ச் கார் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டாடா பன்ச் உள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, பெரும்பாலான சேல்ஸ் ரிப்போர்ட்களில் (Sales Reports) டாடா பன்ச் முதலிடத்தை பிடித்து கொண்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மினி எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதற்கு போட்டியாக வரவுள்ளதாக கூறப்படும் சுஸுகி ஹஸ்ட்லர் காரும் கூட, மினி எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். இது உருவத்தில் மிகவும் சிறிய கார். இந்த காரின் நீளம் 3,395 மிமீ மட்டுமே.
அதே நேரத்தில் அகலம் 1,475 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,425 மிமீ ஆகவும் இருக்கிறது. உருவத்தில் சிறிய கார் என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். அத்துடன் ஷாப்பிங் உள்ளிட்ட சமயங்களில், இந்த காரை பார்க்கிங் செய்வதும் கூட எளிமையான ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி ஹஸ்ட்லர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றுதான் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம் தெரிவிக்கின்றன. ஆனால் இது நடக்குமா? என்பது சந்தேகம்தான். ஆம், சுஸுகி ஹஸ்ட்லர் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாங்கள் கருதவில்லை.
சுஸுகி நிறுவனம் அதன் சர்வதேச மாடல்கள் சிலவற்றை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யாமலேயே, இந்திய சாலைகளில் சோதனை செய்து பார்க்கும் வழக்கத்தை வைத்துள்ளது. இதன்படிதான் சுஸுகி ஹஸ்ட்லர் காரின் சோதனை ஓட்டமும் இந்தியாவில் நடைபெற்று வரலாம் என நாங்கள் கருதுகிறோம்.
எனவே இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதை எல்லாம் கடந்து இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஆரம்ப விலை தோராயமாக வெறும் 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








