இந்தியாவில் 2 லட்சம் யூனிட்டை கடந்து விற்பனையாகும் காரை ஜப்பானில் அறிமுகம் செய்த சுஸுகி!
ஜப்பானை தாயமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி மோட்டார் கார்பரேஷன் (Suzuki Motor Corporation) நிறுவனம், சுவாரஷ்யமாக இந்தியாவில் இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஓர் கார் மாடலை தன்னுடைய தாயகத்திற்காக ஏற்றுமதி செய்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடலாக மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno) இருக்கின்றது. இந்த கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடல்-தான் ஃப்ரான்க்ஸ் (Fronx).
இந்த கார் மாடலையே சுஸுகி தன்னுடைய பிராண்டின்கீழ் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சில முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டு இந்த காரை ஜப்பானில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அந்தவகையில், 4 வீல் டிரைவ் (4WD) அம்சத்தை அதில் சுஸுகி கூடுதலாக சேர்த்து அறிமுகம் செய்திருக்கின்றது.

இதுதவிர இன்னும் சில அழகுப்படுத்தும் வேலைகளை எல்லாம் தன்னுடைய தாய் நாட்டிற்காக இந்த காரில் சுஸுகி நிறுவனம் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த காரை சுஸுகி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவை தவிர இன்னும் சில நாடுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
தெற்கு அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டில் இருந்து இந்த கார் மாடல் உலகின் பிற சந்தைகளில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தற்போது ஜப்பானையும் அது இணைத்திருக்கின்றது. இந்த கார் குஜராத் ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஜப்பானுக்கான ஃப்ரான்க்ஸ் கார் மாடலில் 4 வீல் டிரைவ் அம்சம் மட்டுமல்ல, ஆக்டீவ் சேஃப்டி சிஸ்டம் (Active Safety System) எனப்படும் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சமும் அதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதன் லுக்கில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆகையால், இந்தியாவிற்கான ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜப்பானுக்கான ஃப்ரான்க்ஸ் இரண்டும் வெளிப்புற தோற்றத்தில் ஒரே மாதிரியானதாகவே காட்சியளிக்கின்றன.
ஆகையால், சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமே இரண்டிற்கும் இடையில் வித்தியாசம் இருக்கும், அதுவும், அது மிகப் பெரிய வித்தியாசமாக இருக்காது என்பதும் தெரிகின்றது. மைல்டு ஹைபிரிட் அம்சம் கொண்ட 1.5 லிட்டர் கே15சி எஞ்சின் உடனேயே இந்த கார் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
சிறப்பம்சங்களாக இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, டூயல் சென்சார் பிரேக் சப்போர்ட் II, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த கார் தாங்கியிருக்கும்.
கடந்த வியாழக் கிழமை அன்ற ஃப்ரான்க்ஸ் காரை சுஸுகி நிறுவனம் ஜப்பானில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடல் கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதன் விற்பனை ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியது.
தற்போது இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்திலேயே அது 2 லட்சம் யூனிட் விற்பனையை எட்டியது. இந்த அளவிற்கே அமோக வரவேற்பை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடலுக்கு இந்தியாவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான ஆப்ஷன்களில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் சிஎன்ஜி தேர்வு அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28 கிமீ வரையில் மைலேஜ் தரும். மேலும், இந்த கார் இந்தியாவில் ரூ. 7.51 லட்சம் முதல் 12.87 லட்சம் ரூபாய் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் திறன், அதிக பரீமியம் தர அம்சங்கள், குறைவான விலை உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஃப்ரான்க்ஸ் கார் மாடலுக்கு நாட்டில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் வாயிலாக உலக நாடுகளையும் கவரும் பணியில் தற்போது சுஸுகி களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








