நாம எல்லாரும் எதிர்பார்த்த புதிய ஸ்விஃப்ட் காரு வெளியாகிருச்சு.. அவங்க காட்டுல பண மழை வெளுத்து வாங்க போகுது!
இந்தியர்கள் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் (New Gen Swift) இருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பாக மட்டுமல்ல இந்த கார் உலக கார் ஆர்வலர்கள் பலரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. இந்த நிலையிலேயே 2024 ஸ்விஃப்டை சுஸுகி வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வெளியீடு ஜெர்மனி நாட்டிலேயே அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இந்தியர்கள் பல மாதங்களாக இந்த கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையிலேயே, ஜெர்மன் நாட்டில் சுஸுகி வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவிலும் இந்த கார் வெகு விரைவில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி ஸ்விஃப்ட்டைக் காட்டிலும் புதிய ஸ்விஃப்ட் மிகப் பெரிய மாற்றங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக வெளிப்புறத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
பிள்ளர்கள், கைப் பிடிகள், கிரில், ஹெட்லைட் செட்-அப், வீல் மற்றும் பம்பர் என அனைத்திலும் மாற்றங்களைக் காண முடிகின்றது. இதேபோல், எஞ்சினிலும் புதிய ஸ்விஃப்ட் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இசட் சீரிஸ் வகை எஞ்சினே புதிய ஸ்விஃப்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர ஹைபிரிட் அம்சத்தையும் இந்த காரில் சுஸுகி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே 2024 ஸ்விஃப்ட் மைலேஜை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் 26 கிமீ தொடங்கி 30 கிமீ வரையில் புதிய ஸ்விஃப்ட் மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல புதிய அம்சங்களுடனேயே இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.
அந்தவகையில், 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செவ்வக வடிவ ஏசி வெண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டூயல் டோன் டேஷ்போர்டு என ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வே இதில் வழங்கப்படுகின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடனேயே 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, ஜெர்மன் ஸ்விஃப்ட் காரில் ஆள் கிரிப் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பம்சங்களுடனேயே ஸ்விஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதேவேளையில், வெளிநாடுகள் உள்ள ஸ்விஃப்ட்டைக் காட்டிலும் பலதரப்பட்ட மாற்றங்களுடனேயே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பித்தலின் காரணமாக புதிய ஸ்விஃப்ட் அதிக கவர்ச்சியானதாக மாறியிருக்கின்றது. ஏற்கனவே கவர்ச்சிக்கு பெயர்போன காராகவே ஸ்விஃப்ட் காட்சியளிக்கின்றது. இதையே தற்போது புதிய தலைமுறையில் கூடுதலாக்கி இருக்கின்றது மாருதி நிறுவனம். ஆகையால், இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக சிறப்பான வரவேற்பு புதிய தலைமுறைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஸ்விஃப்ட்டிற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. எனவே விற்பனையிலும் இந்த கார் ஜொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது லேசாக இந்த காருக்கு வரவேற்புக் குறைந்துக் காணப்படுகின்றது. புதுமுக போட்டியாளர்களின் வருகையால் இந்த நிலை அதற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை ஸ்விஃப்டை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









