உற்பத்திக்கு தயாராக இருக்கும் மாருதி எலெக்ட்ரிக் கார் நாளையே வெளியாகபோது! டாடாக்கு கூடுதல் தலைவலி கன்ஃபார்ம்!
ஒட்டுமொத்த கார் காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் (eVX Electric Car) மாடல் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரையே நாளைய (நவம்பர் 05) தினம் மாருதி சுஸுகி வெளியீடு செய்ய இருக்கின்றது. இன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தநிலையில், நாளைய தினம் காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் அக்கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக புகழ்பெற்ற இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024) வாகன கண்காட்சியைப் பயன்படுத்தியே மாருதி சுஸுகி தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. மிலன்-இன் இந்த வாகன கண்காட்சி நாளை தொடங்கி வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

இங்கு உலக புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளர்கள் பலர் பங்கேற்று தங்களின் வருங்கால தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கின்றனர். அந்தவகையிலேயே இந்த உலக மேடையையும் மாருதி சுஸுகி பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ்-ம் ஒன்றாகும்.
இதன் உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் வெர்ஷனே நாளையே தினம் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இந்த கார் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இந்த காரை 2025 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்தியாவிற்கான இவிஎக்ஸ்-ஐ இந்தியாவிலேயே வைத்து அது தயாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் குஜராத்தில் வைத்தே இந்த கார் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா கர்வ் இவி-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
டாடாவின் இந்த தயாரிப்பிற்கு மட்டுமல்ல நெக்ஸான் இவி-க்கும் மாருதியின் இவிஎக்ஸ் போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுக்கு மட்டுமல்ல விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக நம்பப்படும் ஹோண்டா எலிவேட் இவி, டாடா ஹாரியர் இவி போன்ற கார் மாடல்களுக்கும் இந்த வருகை போட்டியாக அமையக் கூடும் என கூறப்படுகின்றது.
அந்த அளவிற்கே அதிக சவால் மிகுந்த வாகனமாக மாருதி சுஸுகி இவிஎக்ஸ் இருக்கப் போகின்றது. மாருதி சுஸுகி தன்னுடைய இந்த எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்துவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை அவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஆனால், உற்பத்திக்கு தயாரான வெர்ஷன் அல்ல. நாளை காட்சிப்படுத்தப்பட இருக்கும் வெர்ஷனே உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கக் கூடிய இவிஎக்ஸ் ஆகும். இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 500 கிமீ வரையில் ரேஞ்ச் தரக் கூடிய பேட்டரி பேக்கை மாருதி சுஸுகி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது, 60 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே மாருதி சுஸுகி இவிஎக்ஸ்-இல் பயன்படுத்தப்பட இருக்கின்றன. சமீபத்திய தகவல்களும் இதையே உறுதி செய்கின்றன. இதுவும் இந்த காரின் மீது எதிர்பார்த்து அதிகரித்துக் காணப்பட காரணமாக உள்ளது. மிக முக்கியமாக இந்தியாவிலேயே இந்த காரை மாருதி சுஸுகி உற்பத்தி செய்ய இருப்பதால் இதன் விலையும் மிகவும் சவாலானதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான தொடக்க விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் உண்மையான விலை 2025 ஆம் ஆண்டிலேயே தெரிய வரும். விலைக்கு ஏற்ப அதிக ஆடம்பர அம்சங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் தாங்கிய காராக இது இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இணையத்தில் இவிஎக்ஸ் காரின் உட்பக்கம் என கூறிக் கொண்டு சில படங்கள் வைரலாகிக் கொண்டு உள்ளன. இதன் வாயிலாக, அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதியைக் கொண்ட கருவிகள் பல இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும்? அதன் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுக நாள் எது? என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ்-க்கு டஃப் கொடுக்கக் கூடிய பிராண்டாக எம்ஜி மாறி வருகின்றது. இந்த வரிசையில் விரைவில் மாருதி சுஸுகியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








